பக்கம்:மதன கல்யாணி-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 மதன கல்யாணி

“பொன்னொழுகு பூவிலுறை பூவையெழில் பூவைப்

பின்னெழில்கொள் வாள்.இணை பிறந்தொளிர் முகத்தாள் கன்னியெழில் கொண்டது கலைத்தட மணித்தேர் மின்இழிவ தன்மையிது விண்இழிவ தென்ன, கானின் உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி மேனிகனி பெற்றுவிலை காமநெறி வாசம் தேனின்மொழி யுற்றினிய செவ்விருனி பெற்றோர் மானின்விழி பெற்றுமயில் வந்ததென வந்தாள்’

ஆன, அத்தகைய அற்புத ஜோதி நிறைந்த பெண் வடிவத்தை இவ்வுலகில் கண்படைத்தவன் எவனும் கண்டிரானென்பது திண்ணம். சிருஷ்டி காலந்தொட்டு எத்தனையோ கோடி ரதி தேவி களைப் படைத்த பிரம்மதேவனுக்கே மோகனாங்கியின் அழகு அதுகாறும் காணாத புதுமையாக இருந்ததென்றால், மற்றவருக்கு அது எங்ஙனம் இருந்திருக்கும் என்பது கூறாமலே விளங்கும். அங்கே கூடியிருந்தோர்களது மனதில் அதற்கு முன் வதைத்திருந்த கவலைகளும் துன்பங்களும் துயரங்களும் சஞ்சலங்களும் தெய்வாம்சம் பொருந்தியிருந்த அந்த மின்னற்கொடியின் தோற்றத்தால் மறைந்து, சூரியன் முன் இருள்போல ஒடி ஒளிந்தன. கானகத்தில் உள்ள மான்கன்றுகள் பூமியில் கால்கள் வைப்பது தெரியாமல் எவ்வாறு துள்ளிக் குதிக்குமோ, அவ்வாறு அவள் நடனம் செய்த போது அவளது அற்புத மேனி நெட்டியால் ஆனதோ, பஞ்சினாலானதோ, காற்றினாலானதோ, அல்லது அவை யாவற்றிலும், இலேசான சொர்பனத்தினால் ஆனதோ என்று ஐயுறும்படி மண்ணிலும் இன்றி விண்ணிலும் இன்றி பம்பரம் போலச் சுழன்றது. அவளது மன வேகத்துக்குச் சமமாகத் தொடர்ந்து சென்று வளைந்து கொடுத்த அவளது தேகம் நடுத்தர உயரமும், அழகிய பருமனும், அதனிடத்தில் அதிகம் குறைவு என்பதின்றி உன்னதமாக உயர்ந்து சரிந்த தசை பிடிப்பும், கவிந்த கன்னங்கள், வளைந்த கழுத்து, பரந்த மார்பு, துவண்ட இடை, கடைந்தெடுத்த கை கால்கள் முதலிய எல்லா அங்கங்களும் சாமுத்திரிகா லட்சணத்திற்கு ஒர் இம்மியளவும் பிசகாமல், பார்க்கப் பதினாயிரங் கண்கள் வேண்டிய அபார சிருஷ்டியாக இருந்தன. அவளது சரீரத்தின் மேற்புறம் சருமத்தால் ஆனதோ, மெருகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/36&oldid=649900" இலிருந்து மீள்விக்கப்பட்டது