பக்கம்:மதன கல்யாணி-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மதன கல்யாணி

கொண்டிருந்தது. மவுண்ட்ரோட்டின் இரு புறங்களிலும் பெருத்த மரங்கள் அடர்ந்திருந்தன. எங்கும் மின்சார விளக்குகள் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஆங்காங்கு போலீஸ் ஜெவான்கள் நின்று கொண்டிருந்தனர். நெடுந்துரத்திற்கொரு மோட்டார் வண்டி வந்து கொண்டிருந்தது. ஆயிரம்விளக்கை நோக்கிப் போகும் கூலிக்கார ஆதி திராவிடர்கள் நன்றாகக் கள்ளைக் குடித்து ஆடி விழுந்து பாடிக்கொண்டு சென்றனர். இருபுறங்களிலும் வெள்ளைக்காரர் கம்பெனிகளின் பிரம்மாண்டமான சட்டிடங்கள் நிறைந்திருந்தன. அவ்விடத்தில் வந்த வண்டி மவுண்ட்ரோட்டி லேயே மேற்குப் பக்கம் செல்ல ஆரம்பித்தது. எதிரில் ஆயிரம் விளக்கு தேனாம்பேட்டையின் வடபாகம் முதலிய ஊர்கள் இருந்தமையால் அந்த வண்டி அங்கே தான் ஏதாவது பங்களா விற்குப் போகிறதோ என்று பொன்னம்பலம் பெரிதும் ஐயமுற்ற வனாகச் சென்றான்.

வண்டி, ஆயிரம்விளக்கைத் தாண்டி சர்க்கார் பூந்தோட்டம், வெள்ளாளத் தேனாம்பேட்டை முதலிய இடங்களை எல்லாம் கடந்து நான்கு மயில் துரத்தில் இருக்கும் சைதாப்பேட்டையை அடைந்தது. ஆனால், வண்டி அந்த ஊருக்குள் நுழையாமல் பாட்டை வழியாகவே மேலும் சென்று அடையாற்றுப் பாலத்தைக் கடந்து அப்பாலும் சென்றது. அவள் சைதாப்பேட்டையில் இருக்கிறாள் என்று பொன்னம்பலம் நினைத்ததும் தவறாக முடிந்தது. வண்டி சைதாப்பேட்டையைத் தாண்டி, கிண்டி என்னும் ஊரை அடைந்தது, அதற்கு மேலும் பாட்டையிலேயே சென்று கடைசியாக ஆலந்துரை அணுகியது. அவ்விடத்தில் பாட்டைக் கருகில் முன்புறத்தில் சிறிய பூஞ்சோலையைக் கொண்ட ஒரு பங்களா இருந்தது. அதன் வாசலிற் போன உடனே வண்டி நின்றது. வண்டிக்காரன் அண்டையில் நின்று “லச்சுமூ! லச்சுமூ! கதவைத் தொற” என்று இரண்டு முறை கூவி அழைத்தான்.

வண்டிக்குப் பின்னாக வந்த பொன்னம்பலம் அதுவே அவளது பங்களா என்று உறுதி செய்து கொண்டவனாய், பைசைகிலை நிறுத்திக் கீழே இறங்கி, அதன் ரப்பர் குழாய்க்கு காற்று அடித்துப் புகுத்துகிறவன் போலப் பாசாங்கு செய்த வண்ணம் வண்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/42&oldid=649915" இலிருந்து மீள்விக்கப்பட்டது