பக்கம்:மதன கல்யாணி-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23

அவளது முகத்தை உற்று நோக்குவதற்குள் அவள் பெட்டி வண்டிக் கதவைத் திறந்து கொண்டு வண்டிக்குள் நுழைந்து விட்டாள். ஆனால் அவளது உயரம் பருமன் நடையழகு முதலிய வற்றினால் அவளே மோகனாங்கி என்று பொன்னம்பலம் எளிதில் ஊகித்துக் கொண்டான். தவிர, அந்த நாடகத்தில் மானேஜரே மிகவும் மரியாதையாக அவளை அழைத்து வந்து வண்டியில் ஏற்றிவிட்டுக் கதவைச் சாத்தித் தாளிட்டு வண்டியை ஒட்டும்படி கூற, வண்டி புறப்பட்டது அதனாலும், அவளே மோகனாங்கி என்று உறுதி செய்து கொண்ட பொன்னம்பலம், பெட்டி வண்டி சிறிது தூரம் போகும்படி விட்டு, தனது பைசைகிலின் மீதேறி உட்கார்ந்து கொண்டு பெட்டி வண்டியைத் தொடர்ந்து சென்றான். வண்டி மறைந்து போக விடாமலும் பிறர் சந்தேகிக்கும்படி வண்டியிடம் அதிகமாக நெருங்காமலும் அவன் சற்று தூரம் பின்னாகவே தொடர்ந்தான்.

வி.பி. ஹாலிலிருந்து புறப்பட்ட பெட்டி வண்டி விசையாகவே ஒடியது. அப்போது இரவு 10-மணி சமயம். ஆதலால், ஜனங் களின் நடமாட்டமும் இல்லாதிருந்தது. பெட்டி வண்டி பெரிய மெட்டு ரயில்கேட்டைக் கடந்து ரயில் பாதைக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் மேற்கு முகமாகச் செல்லும் பாதை வழியாக ஒடி எழும்பூரைக் கடந்து கோமளேசுவரன் பேட்டை வாராவிற்கு வந்தது. அவள் கோமளேசுவரன் பேட்டையில் இருப்பவள் என்று ஐயமுற்ற பொன்னம்பலம் அவ்வளவு சுலபத்தில் தனது வேலை முடியப் போவது பற்றி தனக்குள் மகிழ்ச்சி அடைந்தவனாய் மிகவும் ஜாக்கிரதையாகத் தொடர்ந்து வந்தான். வண்டி, கோமளேசுவரன் பேட்டைக்குள் நுழையாமல் கூவம் ஆற்றின் கரை ஓரமாகச் செல்லும் பாதையிலேயே ஒடி ஸ்பென்ஸர் தபால் ஆபீசுக்கருகில் வந்து மவுண்ட்ரோட்டை அடைந்தது. தான் எதிர்பாராத திக்கில் வண்டி போவதைக் குறித்து பொன்னம்பலம் வியப்படைந்தவனாய் பின்னால் வந்து கொண் டிருந்தான். பெட்டி வண்டியின் மேல் உட்கார்ந்திருந்த வண்டிக் காரன் இரண்டொரு முறை பின்புறம் திரும்பிப் பார்த்தான் ஆதலால் அவன் தன்னைக் கண்டு கொண்டானோ என்று ஒரு வகையான அச்சம் பொன்னம்பலத்தின் மனதில் உண்டாகிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/41&oldid=649913" இலிருந்து மீள்விக்கப்பட்டது