பக்கம்:மதன கல்யாணி-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 3:

இருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வேடிக்கையாக நடந்து வந்துவிட்டேன். நல்ல வெயில் வேளை. மிகவும் தாகமாக இருக்கிறது. இங்கே தென்னமரம் இருப்பதைக் கண்டேன். இளநீர் விலைக்கு அகப்பட்டால், ஒன்று வாங்கி சாப்பிட்டுப் போகலாம் என்று வந்தேன். அது தான் வந்த காரியம்.”

அதைக் கேட்ட கருப்பாயி விசனமடைந்து,"அடாடா மரத்துலே ஏறிப் புடுங்கிப் போட மனிசரு இல்லையே! என்ன செய்யறது! பெரிய மனிசரு தாவமாயிருக்குதுன்னு சொல்லுறீங்களே! நான் அம்பட்டச்சி; நீங்க எங்க ஊட்டுலே தண்ணி கிண்ணி சாப்பிட மாட்டீங்க. கொஞ்சம் இப்பிடியே திண்ணையிலே குந்துங்க. அதோ எதுக்கே தெரியுதே வங்களா; அதுலே எவனாச்சும் தோட்டக்காரன் கீட்டக்காரன் இருந்தா, இட்டாறேன்” என்றாள்.

அதைக் கேட்ட மைனர், திண்ணையின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்ட வண்ணம், “இல்லை அம்மே! நீ போக வேண்டாம், போய்வர நேரமாகும். திண்ணையிலே கொஞ்ச நேரம் உட்கார்ந் திருந்தால், தாகம் போய்விடும். அந்தப் பங்களாவிலே யார் இருக்கிறார்களோ என்னவோ! அங்கே போய் பகல் பன்னிரண்டு மணி சமயத்திலே தொந்திரவு செய்யக்கூடாது. போக வேண்டாம் அம்ம்ே! நான் கூட அந்தப் பங்களாவுக்குள்ளே போய், தண்ணி இருந்தால் சாப்பிடலாம் என்று பார்த்தேன். வெளிக்கதவு சாத்தி மூடப்பட்டிருக்கிறது. அதில் யார் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா?” என்று நயமாகக் கேட்டான்.

கருப்பாயி, “தெரியுஞ் சாமி! யாரோ நாடவக்காரியாம்; ஒரு சின்னப் பொண்ணு அதுலே இருக்கிறாளாம்” என்றாள்.

மைனர்:- நாடகக்காரியா? நீ அவளைப் பார்த்திருக்கிறாயா? உனக்கு அவள் சிநேகந்தானா? - என்றான்.

கருப்பாயி:- அவளெ நான் பார்த்ததே இல்லிங்க.

மைனர்:- அப்படியானால் இந்த இடத்துக்கு நீ புதியவளா அல்லது அவள் புதியவளா?

கருப்பாயி:- நான் எங்கப்பன் பாட்டங்காலமா இஞ்கெத்தான் இருக்கறவ. அவ இந்த வங்களாவுக்கு வந்து ஒரு மாசக்கால மாச்சுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/49&oldid=649927" இலிருந்து மீள்விக்கப்பட்டது