பக்கம்:மதன கல்யாணி-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 33

அவளுடைய வேலைக்காரியின் மூலமாக இதை முடிக்க முடியுமா? அவள் பங்களாவை விட்டு வெளியில் உலாவும் பொருட்டு எப்போதாவது வருவதுண்டா? அவள் பணத்தின் மேல் ஆசைப் பட்டால், எவ்வளவு பணம் கேட்காள்? என்ற விவரங்களை எல்லாம் நீ அறிந்து வைக்க வேண்டும். இதோ முதலில் உனக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன். இதை அச்சாரமாக வைத்துக்கொள்; காரியத்தை முடித்தால், ரூபாயாலேயே உனக்கு அபிஷேகம் செய்து விடுகிறேன் - என்ற வண்ணம் தனது பணப்பையை எடுத்து அவளுக்கெதிரில் ஆடம்பரமாகத் திறந்து பத்து ரூபா நோட்டு ஒன்றை எடுத்து அவளுக்கெதிரில் விசிறிப்போட்டான்.

உடனே கருப்பாயி, “பணம் குடுக்கிறது இருக்கட்டுங்க. இதுக்குன்னு ஒங்க மனசுக்கு சந்தோஷமான ஒரு அலுவலெ முடிச்சுக்குடுத்தா, எனாம் சனாம் குடுக்காமலா இருப்பீங்க. எல்லாத்துக்கும் நீங்க ஒண்னு செய்யுங்க. பொளுது சாய ஏளுமணிக்குள்ளற எல்லாச் சங்கதியெயும் வெசாரணை பண்ணி வைக்கறேன். சரிப்பட்டா அந்த வேலைக்காரியக்கூட இட்டாந்து இஞ்சே வச்சு வைக்கறேன். நீங்க நேருலே பேசி முடிச்சுக்கலாம்” என்றாள்.

மைனர்:- அப்படியானால் நான் ராத்திரி எங்கே படுத்துக் கொள்ளுகிறது!

கருப்பாயி:- அநேகமா நாடவக்காரி வங்களாவுக்கே போறத்துக்கு வளி செஞ்சுப்புட்றேன். தவரினா, இஞ்சேயே படுத்திருங்க; புதுப்பாயி தலவாணி எல்லாம் தயாருபண்ணி வைக்கறேன் -

என்றாள்.

அதைக் கேட்ட மைனர் மிகவும் சந்தோஷம் அடைந்தவனாய், அவளது பிரரேபணைக் கிணங்கினான், தேடிப்போன மருந்து காலில் தட்டுப்பட்டது போல, தனது கருத்துக்கு நிரம்பவும் அனுகூலமான உதவி வெகு சுலபத்தில் ஏற்பட்டது பற்றி, அவன் தனது அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்து கொண்டதன்றி அந்தக் காரியம் அவசியம் பலிக்கும் என்பதற்கு அது ஒரு நல்ல சகுனம் என்று நினைத்தவனாய் தனது பணப்பையைத் திறந்து இன்னொரு பத்து

ம.க.1-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/51&oldid=649932" இலிருந்து மீள்விக்கப்பட்டது