பக்கம்:மதன கல்யாணி-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35

வழியாகவே சைதாப்பேட்டையை நோக்கி நடந்து அதற்குச் சமீபத்தில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் என்ற சிறிய ஊருக்கு வந்து சேர்ந்தாள். அவள் அந்த ஊருக்குள் நுழையாமல், அதற்கு அரைக்கால் மயில் மேற்கிலிருந்த ஒரு காட்டிற்குள் புகுந்தாள். அந்தக் காடு மலைபோல வளர்ந்த சப்பாத்துப் புதர்களும் புளிய மரங்களும் நிறைந்து அதற்குள் பார்வை நுழையாவண்ணம் அடர்ந்து காணப்பட்டது. மலைத் தொடரைப் போல இரண்டு திக்கிலும் முடிவின்றி நெடுந்துரம் சென்ற அந்த காட்டண்டை சென்ற அம்பட்டக் கருப்பாயி, தனது கூர்மையான விழியால், அதில் பிறருக்குத் தெரியா வண்ணம் மறைந்து வளைந்து வளைந்து சென்ற ஒரு சிறிய ஒற்றையடிப் பாதையை அடைந்து அதற்குள் நுழைந்து அரைக்கால் மயில் தூரம் சென்றாள். ஆகாயத்தை அளாவிய புளிய மரங்களும் கள்ளிப் புதர்களும் சப்பாத்து புதர்களும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்த தோற்றம் மிக மிகப் பயங்கரமாக இருந்தது. அதற்குள் சென்ற ஒற்றையடிப் பாதை பழக்கமுள்ளவர்க்கன்றி மற்றவருக்குத் தெரியாததாய் மறைந்து கிடந்தது. சிறிதும் அச்சமின்றி அதன் வழியாகச் சென்ற கருப்பாயி நெடுதூரம் நடந்து அந்தக் காட்டின் முடிவை அடைந்தாள். -

அவ்விடத்தில், மறைந்திருந்த 15, 20.சிறிய வீடுகள் காணப் பட்டன. அவை யாவும் கூரை வீடுகளாக இருந்தன. அவற்றின் நடுவில் ஒட்டு வீடு ஒன்று இருந்தது. அந்த ஊர் குறவர்கள் வசிக்கும் ஒரு சிறிய குப்பமாகக் காணப்பட்டது. எங்கும் குறவர் களும் குறத்திகளும் சிறுவர்களும் சிறுமிகளும் மூங்கில் பிளந்து கூடை முறங்கள் பின்னுவோரும், கருவேப்பிலை சேகரிப் போரும், காட்டுப் பூனைகள் குத்துவோரும், பறவைகள் பிடிப்போரும், வேறு பலவகையான தொழில்களைச் செய்வோரு மாகக் காணப்பட்டனர். ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் ஏராளமாக இருந்தன. அவ்வூரில் இருந்த மனிதரது தொகையைக் காட்டிலும் நாய்களின் தொகையே அதிகமாக இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு நாய்கள் வேட்டைக் காக வளர்க்கப்பட்டன. கூரைகள்தோறும் சுரைக் கொடிகள் மூடிக் கொண்டிருந்தன. அவ்வாறு தோன்றிய அந்தச் சிற்றுர் தனியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/53&oldid=649936" இலிருந்து மீள்விக்கப்பட்டது