பக்கம்:மதன கல்யாணி-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39

அதைக் கேட்ட கட்டையன், “அப்பிடியானா இப்ப பலத்த வேட்டெ கொண்டாந்திருக்கேன்னு ஆவுது. அப்படித்தானா?” என்று சுமுகமாகக் கேட்டான். “

கருப்பாளி:- கொண்டாந்துதான் இருக்கறேன். அது இருக்கட்டும். வள்ளியம்மா ஏழு மாஷமா முளுவாமெ இருக்கறான்னு சொல்லிக் கிட்டாவளே. பளைய செநேகிதகாரி நான் ஒருத்தி இருக்கறேனே. எனக்குச் சொல்லியனுப்ப ஒனக்குத் தெரியாமெத்தானே போச்சு? என்னெயெல்லாம் நீ மதிப்பியா அப்பா! நான் என்ன் சின்னப் பொண்ணா இருவது வருசத்துக்கு மின்னே இருந்த மாதிரியா இப்ப கொமரியா இருக்கறேன் - என்று நிஷ்டுரமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட கட்டையன், “பருப்பில்லாமெ கண்ணாளம் நடக்குமா! நீ தான் வந்திருந்து புள்ளெ பெத்து விடணும்; ஒனக்கு சேதி சொல்லி அனுப்பணுமின்னு ரெண்டு நாளெக்கி மின்னதான் வள்ளிக்கிட்ட சொன்னேன். அதுக்குள்ளற நீயே வந்துட்டே. ஒனக்குத்தான் நல்லா மருத்துவம் தெரியும். நீதான வரணும்; அந்த சமயத்துலே சொல்லி அனுப்பறேன் உடனே வந்து குதிச் சுடனும் தெரியிதா? வராமெ இருந்துடப் போறே?” என்றான்.

கருப்பாயி, “அம்பிட்டுப் பிரியமாச்சும் வச்சிருக்கிறியே! அதுவே போதும்; ஒரு காக்கா காலுலே சீட்டு எழுதி அனுப்பினாக்கூட ஒடனே ஒடியாந்துட மாட்டேனா? நீ மவராசா இல்லியா ஒங்க ஊட்டு அவசரத்துக்கு வராமெப் போனா, கண்ணெப்புடுங்கிட மாட்டியா பயப்படாதே. நான் இருக்கறேன் சமயத்துக்கு” என்றாள்.

அந்த முகஸ்துதியைக் கேட்ட கட்டையன் மகிழ்ச்சியும் தற்பெருமையும் அடைந்தவனாய், “கருப்பாயியொட பிரியம் எப்பவும் மாறாமே ஒரே மாதிரியா இருக்குது. மத்தவங்க அப்பிடி இல்லே. அது கெடக்கட்டும். கொஞ்சம் சோறு துன்றியா? ஆருடியது வள்ளியம்மா! எங்கே அக்காளுக்குக் கொஞ்சம் கறியும் சோறும் சட்டியிலே போட்டுக் கொண்டாந்து வை; லோட்டாவுலே தண்ணி கொண்டா” என்று அன்போடு கூறினான். -

அதைக் கேட்ட கருப்பாயி, “இல்லே அப்பா வானாம் வானாம்; இப்பதான் சாப்பிட்டு ஒரு அவசர சோலியா ஒடியாந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/57&oldid=649943" இலிருந்து மீள்விக்கப்பட்டது