பக்கம்:மதன கல்யாணி-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47

அவர்களது செய்தி இங்ஙனம் இருக்க, கட்டையன் குறவன் தனது காரியத்தை முடித்த பிறகு, இரண்டாம் நாள் சென்னையில் இருந்த சின்ன துரையிடம் வந்து, குழந்தையைக் கொணர்ந்து நடு இரவில் கழுத்தைத் திருகிக் கொன்று பக்கத்து ஊரில் உள்ள ஒரு வீட்டு வாசலில் போட்டுவிட்டு வந்ததாகக் கூறி, அதன்மேல் அணியப்பட்டிருந்த அழகிய சிறிய ஆடைகளையும் ஆபரணங் களையும் காட்டியதன்றி, அந்தக் குழந்தையின் மார்பில் மாம்பிஞ்சு போல ஒரு மச்சம் இருந்ததைக் கண்டதாகவும் கூறினான். அதைக் கேட்ட சின்னதுரை திருப்தி அடைந்து, மிகுதித் தொகையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான். இரண்டு நாட்களில் பத்திரிகைகளிலும் அந்தக் குழந்தை காணாமற் போனதைப் பற்றிய விவரம் வெளியாயிற்று. அதைக் கண்ட சின்னதுரை மிகவும் சந்தோஷம் அடைந்து, இனி கவலையில்லை என்றும், கிழவன் அதிசீக்கிரத்தில் ஒழிந்து போவான் என்றும், உடனே தான் ஜெமீந்தார் ஆகிவிடலாம் என்றும் நினைத்து மனப்பால் குடித்திருந் தான். அதன் பிறகு ஒரு மாத காலமாயிற்று. மாரமங்கலத்தில் கிழவர் இன்னமும் படுத்த படுக்கையாகவே இருந்தார். சென்னைக்கு வந்த கல்யாணி இடத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. குழந்தையைப் பற்றிய நிச்சயமான செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றும், அநேகமாக அகப்பட்டுப் போகும் என்ற நம்பிக்கை இருப்ப தாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த கிழவர் மிகுந்த மகிழ்ச்சியும் ஆவலும் கவலையும் கொண்டு தத்தளித்த வராய் இருந்தார். அவ்வாறு இன்னொரு மாத காலம் சென்றது. கடைசியாக கல்யாணியிடத்திலிருந்து வேறொரு கடிதம் வந்தது. குழந்தை அகப்பட்டுவிட்டதாகவும், அது சரியான போஷணை இல்லாமையால் இளைத்துப் போய் நோய் கொண்டு இருப்ப தாகவும், ஒரு வாரத்தில் அது குணமடையும் என்று டாக்டர் சொல்லுவதாகவும், குணமடைந்தவுடன் குழந்தையை எடுத்துக் கொண்டு மாரமங்கலம் வந்து சேருவதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. எதிர்பாராத அந்த சந்தோஷ சமாசாரம் கிழவருக்குப் பொறுக்க முடியாததாகி விட்டது. அளவு கடந்த மகிழ்ச்சிப் பெருக்கைத் தாங்க மாட்டாமல் அவர் கீழே சாய்ந்து விட்டார். அவரது இருதயம் அந்த மனவெழுச்சியைத் தாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/65&oldid=649964" இலிருந்து மீள்விக்கப்பட்டது