பக்கம்:மதன கல்யாணி-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மதன கல்யாணி

மாட்டாமல் உண்மையிலேயே படீரென்று வெடித்துவிட்டது. குழந்தையைத் திரும்பவும் கண்ணால் காணும் பாக்கியத்தை அடையாமல் அவர் ஒரே நொடியில் உயிர் துறந்தார். அதைக் கண்ட சிப்பந்திகள் யாவரும் அச்சமும், திகைப்பும், விசனமும் அடைந்து, சென்னையில் இருந்த கல்யாணியம்மாளுக்கும், சின்னதுரைக்கும் தந்தி அனுப்பினார்கள். அதைப் பெற்ற சின்ன துரை தான் நீண்டகாலமாக எதிர்பார்த்த அதிர்ஷ்டம் அப்போதே பலித்ததென்று நினைத்து கரைகடந்த சந்துஷ்டி அடைந்து, கிழவரது உத்தரகிரியைகளைச் செய்து, சமஸ்தானத்தை ஏற்று கொள்ளுவதற்குத் தயாராகப் புறப்பட்டு மறுநாளே மாரமங்கலம் வந்து சேர்ந்தான். ஆனால், பிறர் தன் மீது சந்தேகிப்பார்களே என்ற நினைவு கொண்டவனாய், அவன் விசனமுற்றவன் போல நடித்து, ஜெமீந்தாரது பிணத்தின் மேல் வீழ்ந்து அழுது தனது துர்நடத் தையைப் பற்றியும், தான் அவரது மனதிற்கு அதிருப்தி உண்டாகும்படி நடந்து கொண்டதைப் பற்றியும் பிரலாபித்துத் தனது குற்றத்தை உணர்ந்து கழிவிரக்கங் கொண்டவன் போலப் பாசாங்கு செய்தான். குழந்தை அகப்பட்டு விட்டது என்ற விஷயம் கிழவரைத் தவிர மற்றவருக்குத் தெரியாது ஆகையால், சின்னதுரையே இனி ஜெமீந்தார் என்றும், அவனே கிழவருக்குக் கருமம் செய்யவேண்டியவன் என்றும் ஜனங்கள் எல்லோரும் முடிவு செய்தனர்; கல்யாணியம்மாளது வருகையை நெடுநேரம் எதிர்பார்த்தனர். அவள் வரவில்லை ஆகையால் புரோகிதரை வைத்துக் கொண்டு சின்னதுரை தகனம் செய்வதற்குரிய சடங்கு களைத் தொடங்கினவனாய், இன்னம் சிறிது நேரத்தில் பிணம் ஒழிந்து போகும் என்றும், அபாரமான அவரது செல்வம் எல்லாம் உடனே தனது வசம் ஆகிவிடும் என்றும் நினைத்து மனக் கோட்டை கட்டிய வண்ணம் இருந்தான். அவர்கள் கொட்டி முழக்கிப் பிணத்தை எடுப்பதற்கு ஆயத்தமாக இருந்த தருணத்தில் கல்யாணியம்மாள் கதறிக் கொண்டு ஓடிவந்து தனது கணவன் மீது விழுந்து புரண்டு அழுது பிரலாபித்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு நெடுநேரம் அழுதாள். அதன் பிறகு ஜனங்கள் எல்லோரும் அவளைத் தேற்றி, சவத்தைத் தகனம் செய்ய வேண்டும் என்று கூறி, சின்னதுரையைக் கொண்டு மேலே ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/66&oldid=649966" இலிருந்து மீள்விக்கப்பட்டது