பக்கம்:மதன கல்யாணி-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79

நோக்கி, “மைனர் துரையே பணப்பை, மோதிரங்கள், தங்கக் கடிகாரம் எல்லாம் இப்படி வரட்டும். சீக்கிரம் ஆகட்டும்” என்று அதட்டிக் கூறவே, அதைக் கேட்ட மைனர், அவள் ஒரு கொள்ளைக்காரி என்று உணர்ந்து கொண்டவனாய், அது கனவோ நினைவோ என்று பிரமித்துக் கல்லாகச் சமைந்து சிறிது நேரம் நிற்க, அதைக் கண்ட அந்த ஸ்திரீ “இன்னமுமா தாமசம்? உயிரோடு நீர் கொடுக்கிறீரா? இல்லாவிட்டால், உம்மைப் பிணமாக்கி நானே எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்ன யோசனை? எடும் எடும்; நாழிகையாகிறது. நான் போக வேண்டும்” என்று அதட்டிக் கூறினாள்.

மைனர் கோழைத்தனத்தில் மிகவும் பேர் பெற்றவன் ஆதலால், அவன் வாயைத்திறந்து பேச முயன்ற போது அவனது வார்த்தை கள் அவனைக் காட்டிலும் அதிகமாக அஞ்சி தொண்டைக்குள் ஒடி ஒளிந்து கொண்டன. என்றாலும், அவன் பெரும்பாடுபட்டுப் பேச முயன்றவனாய், “இது உண்மைதானா? அல்லது, என்னைப் பரிகாசம் செய்வதற்காக இப்படி வேடிக்கை செய்கிறாயா?” என்று குழறிக் குழறிப் பேச, அதைக் கேட்ட போலி இன்ஸ்பெக்டரான பெண் “இன்னம் ஒரு நிமிஷம் நீர் தாமசம் செய்வீரானால், நான் விளையாடவில்லை என்பதைக் காரியத்திலேயே காட்டி விடுவேன் அப்புறம், அநியாயமாகத் தாய்க்குப் பிள்ளை இல்லாமல் போய்விடும்; ஜாக்கிரதை’ என்று மிகவும் அழுத்தமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட மைனர் மறுமொழி ஒன்றும் சொல்லமாட்டாமல் தத்தளித்து சுமார் மூவாயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணப்பையையும், தங்கச் சங்கிலியோடு தங்க கடிகாரத்தையும், வைர மோதிரங்கள் கடுக்கன்கள் முதலியவற்றையும் எடுத்து அந்தத் திருட்டுத் தெய்வத்திற்கு மிகுந்த பயபக்தியோடு பாத காணிக்கையாக வைக்க, அந்த வேஷதாரி மகிழ்ச்சியாலும் புன்னகையாலும் மலர்ந்த முகத்தோடு அவற்றை வாங்கித் தனது சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு, “சரி, உம்முடைய சட்டையில் வைரப் பொத்தான்கள் மின்னுகின்றன. ஆனார், நீர் மிகவும் தயாள குணத்தோடு இத்தனை பொருள்களை எனக்கு வெகுமதி கொடுத்திர் ஆகையால், பொத்தான்களை நீரே வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/97&oldid=650032" இலிருந்து மீள்விக்கப்பட்டது