பக்கம்:மதன கல்யாணி-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99

தோட்டத்திற்குள்ளேயே நான் அவனைச் சுட்டுவிட்டால், அதனால், தனக்கு ஏதேனும் தீங்கு நேரலாம் என்று நினைத்த வனாய், அந்த இடத்திற்கு அரை பர்லாங்கு துரத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் சென்று, தோட்டத்திற்குள் திருடன் நுழைந்திருப்பதாகக் கூறி சில ஜெவான்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குள் நுழைந்து, எப்படியாகிலும், தந்திரம் செய்து, அவனைச் சுட்டு விடலாம் என்று நினைத்தவனாய், உடனே விரைவாக போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடினான். தன்னைத் தொடர்ந்து வரும் பெருத்த விபத்தைப் பற்றி சிறிதும் சந்தேகியாத மதனகோபாலன், கண்மணியம்மானைச் சந்திப்பதால் தனக்கு ஏற்படப் போகும் ஆனந்தத்தையே எதிர்பார்த்து, அதிலேயே தனது முழு மனதையும் செலுத்தியவனாய் நடந்து ஆலமரத்தை அடைந்தான். அடைந்தவன், தனது முகத்தை நாற்புறங்களிலும் திருப்பி கண்மணியம்மாள் வந்திருக்கிறாளோ என்று பார்க்க, அவள் காணப்படவில்லை. உடனே அவனது மனதில் ஒருவகையான கலக்கம் தோன்றியது. அவள் வரக்கூடாமல், மீனாகூஜியம்மாள் ஏதேனும் இடையூறு செய்துவிட்டாளோ, அல்லது அவள், ஒருகால் சிறிது நேரத்திற்குப் பிறகு வருவாளோ என்று மதனகோபாலன் பலவாறு ஐயமுற்றவனாகத் தயங்கி நிற்க, அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது. சிறிது துரத்திற்கப்பால், இருளில், ஒரு வடிவம் வந்து கொண்டிருப்பதாகத் தென்பட்டது. அதைக் கண்டவுடன், மதனகோபாலனது இருதயம் தடதட வென்று அடித்துக் கொண்டது. அவனது மனதில் இன்பமோ துன்பமோ என்று பகுத்தறியக் கூடாத பலவகைப்பட்ட உணர்ச்சிகள் பொங்கி எழுந்து, அவனை சஞ்சலத்தில் ஆழ்த்தின. வந்தது அவள் தானோ, அல்லது வேறு மனிதரோ என்ற ஒர் அச்சமும் எழுந்து வருத்தியது. அவ்வாறு அவன் தவித்திருந்த சமயத்தில் கண்மணியம்மாள் ஒரு கருப்புத் துணியால் தனது கழுத்து முதல் கால் வரையில் மூடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள். தான் செய்தது பெருத்த தவறு என்ற எண்ணத்தினால், அவளது மனமே அவளை மிகவும் வதைத்தமையால் அவளது தேகமும் அச்சத்தையும் நடுக்கத்தையும் காட்டியது; அவளது மனமும் சஞ்சலப்பட்டுத் தவித்தது. ஆனால் தனது சொற்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/103&oldid=645829" இலிருந்து மீள்விக்கப்பட்டது