பக்கம்:மதன கல்யாணி-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7

சந்தேகமும் உண்டாயிற்று. ஆனால் தாங்கள் அவளுக்கு ஏராளமான பொருள் கொடுப்பதாகவும் வேறு பல சுதந்திரங்களை உண்டாக்கிக் கொடுப்பதாகவும், ஒப்புக்கொண்டு கைம்மாட்டி எழுதிக் கொடுத்திருக்கையில், அவள் அப்படிப்பட்ட பெருத்த அதிர்ஷ்டத்தையும் சந்தர்ப்பத்தையும் இழந்துவிட நினைக்க மாட்டாளாதலால், அவள் மைனரை எப்படியும் விடுவிப்பாள் என்ற உறுதியான நம்பிக்கையும் உண்டாயிற்று. அவ்வாறு பல வகையான துன்பங்களில் அகப்பட்டுத் தத்தளிக்க நேர்ந்ததைப்பற்றி அவள் பெரிதும் துயருற்றிருந்த நிலைமையில் அப்போதைக்கப்போது, அவளது மனதில் மதனகோபாலனது நினைவும் எழுந்தெழுந்து மறைந்தது. அவனது விஷயத்தில் தான்செய்தது பெருத்த அக்கிரமமான காரியம் பன்பதும் அவளது மனதில் அடிக்கடி பட்டது. ஆனால் கண்மணியம்மாள் அவன் மீது பிரியம் வைக்கலாமா என்ற எண்னமும், தான் நிஸ்டிகபடமாக அவன்மீது வாத்சல்யம் வைத்து, அவனை அனைத்துக் கொள்ள எவ்வளவு மன்றாடியும், மிகவும் கேவல நிலைமையில் இருப்பவரான அந்தச் சிறுவன் அதை மறுக்கலாமா என்ற எண்ணமும் தோன்றவே, தான் செய்த காரியங்கள் யாவும் அவனுக்கு நியாயமான தண்டனைகளே என்று அவள் தனக்குத்தானே ஒருவாறு ஆறுதல் செய்துகொண்டாள். எந்த பங்களாவிலும் அவனைச் சேர்க்காமல் எல்லோரும் அவனை விலக்கியிருப்பது நிச்சயமாதலால், இனி அவனால் தனக்கு எவ்விதமான இடரும் ஏற்படாதென்று நினைத்தவளாய், அவள் ஒறுவாறு திருப்தியடைந்து உட்கார்ந்திருந்தபோது, அவளுக்குத் தனது புதல்வியரது நினைவு உண்டாயிற்று. தாங்கள் திருடர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்ட விஷயத்தையும், நிச்சயதாம்பூல முகூர்த்தம் ஒத்திவைக்கப்பட்ட விஷயத்தையும், தான் அவர்களுக்கு ஒருவாறாக அறிவித்து வைக்கவேண்டியது அவசியமாகத் தோன்றியது. ஆகவே, அவள் உடனே ஒரு வேலைக்காரியைக் கூப்பிட்டு, தனது புத்திரிகளை அழைத்து வரும்படி உத்தரவு செய்ய, அவள் அவ்வாறே அழைத்துவரப் போய்விட்டாள். போனபின், கல்யாணியம்மாள் அந்த விஷயங்களைத் தனது குமாரிகளிடத்தில் எவ்வாறு மாற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/11&oldid=645842" இலிருந்து மீள்விக்கப்பட்டது