பக்கம்:மதன கல்யாணி-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 46 மதன கல்யாணி

உனக்குத் தலைநோவென்று கோமளவல்லியம்மாள் சொல்லக் கேள்விப்பட்டேன்; மருந்து கொண்டுவந்திருக்கிறேன்’ என்றாள். அதைக் கேட்ட துரைஸானி, “என்னுடைய தலைநோவு இப்போது நின்று போய்விட்டது. வேறே மருந்து வேண்டாம். கொஞ்ச நேரம் நிம்மதியாகப் படுத்திருப்பதே போதும்; இப்போது எழுந்து வந்து என்னால் கதவைத் திறக்க முடியவில்லை” என்று முக்கி முணகி மறுமொழி கூறினாள். -

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “சரி, அப்படியே செய்; நான் போகிறேன்” என்று கூறிவிட்டு, அவ்விடத்தை விட்டுப் போய் சிறிது துரத்திற்கப்பால் இருந்த ஒரு பெருத்த பூத்தொட்டியின் மறைவில் இருந்து, அந்த வாசலைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு கால் நாழிகை நேரம் சென்றது; துரைஸானியம்மாள் தனது முகத்தை மாத்திரம் வெளியில் நீட்டி மிகவும் அஞ்சிய பார்வையாக அப்புறம் இப்புறம் திரும்பிப் பார்த்து விட்டு, தனது சிரத்தை உள்ளே இழுத்துக் கொள்ள, அந்த நொடியில் மோகன ரங்கன் அந்த விடுதிக்குள் இருந்து வெளியில் வந்து, விசையாக நடந்து அப்பால் போய்விட்டான்.

கல்யாணியம்மாளது மனதில் சிறிதளவு இருந்த சந்தேகமும் விலகியது. தனது மூத்த புத்திரியின் கற்பும் தேக பரிசுத்தமும் அழிந்து போய்விட்டன என்பதை சந்தேகமற உணர்ந்த மகா துர்ப்பாக்கியவதியான அந்த அம்மாளது மனக்கொதிப்பையும், தேகத்தின் பதைப்பையும் என்னவென்று சொல்வது! அளவிட அரிய கோபத்தினாலும், துயரத்தினாலும், ஏமாற்றத்தினாலும் கல்யாணியம்மாள் என்ன செய்வதென்பதை உணராமல், இரண் டொரு விநாடி நேரம் அப்படியே அசைவற்று நின்றபின் ஏதோ ஒரு நினைவைக் கொண்டவளாய், அவ்விடத்தை விட்டு நடந்து தனது புத்திரியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தாள். அப்போது ஒரு கட்டிலிற்கருகில் நின்று, சீர்குலைந்து தாறுமாறாகக் கிடந்த தனது அளகபாரத்தையும், சேலை முதலிய ஆடைகளையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த துரைஸானியம்மாள், திடீரென்று உள்ளே நுழைந்த தனது தாயைக் காணவே திடுக்கிட்டு அச்சமும் நடுக்கமும் கொண்டு மிகுந்த கிலேசமடைந்து, தனது முகத்தை வேறு பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/120&oldid=645857" இலிருந்து மீள்விக்கப்பட்டது