பக்கம்:மதன கல்யாணி-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

6 மதன கல்யாணி

3

மதனகோபாலனது தலை, உடம்பு, கால்கள் முதலியவற்றைப் பிடித்துக் துக்க, ஒருவன் லாந்தரை முன்னால் பிடித்து அவர்களுக்கு வழிகாட்ட ஐவரும் வந்த வழியாகவே நடந்து வேலிப்படலை அடைந்து, திறந்திருந்த வாசலின் வழியாக ராஜபாட்டைக்குப் போய்ச் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனிருந்த திசையில் திரும்பினர். அதே காலத்தில் அந்த ராஜபாட்டையில் அவர்களுக்கு எதிர் திசையிலிருந்து ஒரு ஸாரட்டு வண்டி வந்தது. அதன் இரு பக்கங்களிலும், பிரகாசமான பெரிய இரண்டு லாந்தர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வெளிச்சமும் முனிசிபல் லாந்தர்களின் வெளிச்சமும் ஒன்று கூடியதால் அந்த இடம் இருளின்றி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த ஸாரட்டில், சாரதியைத் தவிர, இன்னமும் ஒரே ஒரு மனிதர் அதன் முக்கிய ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார். கிருஷ்ணாபுரம் சமஸ்தானத்தாரது பங்களாத் தோட்டத்திற்குள் இருந்து ஒரு மனிதனைத் தூக்கிக் கொண்டு சில போலீசார் வந்ததைக் கண்ட அந்த ஸ்ாரட்டின் சொந்தக்காரர், தமது வண்டியை உடனே அவ்விடத்தில் நிறுத்தச் செய்து கீழே இறங்கி, அந்த மனிதர்களை நோக்கி, “என்ன ஐயா அது? என்ன விசேஷம்?” என்று கேட்ட வண்ணம் அருகில் நெருங்கி, அவர்களது தோள்மீது பிணம் போலத் துவண்டு கிடந்த மனிதனது அடையாளத்தைக் கண்டு கொண்டவரைப் போலத் திடுக்கிட்டுத் திகைத்து வருந்தலானார். அவரது முகம் சடக்கென்று மாறுதல் அடைந்து சகிக்க இயலாத துயரத்தைக் காண்பித்தது. தேகம் பதறியது. அந்தச் சமயத்தில் ஜெவான்களுள் ஒருவன், “இவன் ரிவால்வரினால் காயப்பட்டு மூர்ச்சித்திருக்கிறான். போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகிறோம்” என்றான்.

அதைக் கேட்ட அந்த மனிதர் மிகுந்த சஞ்சலமடைந்தவராய், “சரி, நீங்கள் தூக்கி சிரமப்பட வேண்டாம்; இந்த வண்டியில் வையுங்கள், நாங்கள் வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒட்டுகிறோம்” என்று கூறிய வண்ணம், வண்டியைத் திருப்பும்படி சாரதிக்கு உத்தரவு கொடுக்க, அவன் இமைப்பொழுதில் அதைத் திருப்பி நிறுத்த, அதுவும் நல்ல யோசனைதான் என்று எண்ணிக் கொண்ட ஜெவான்கள் மதனகோபாலனைக் கொணர்ந்து வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/140&oldid=645885" இலிருந்து மீள்விக்கப்பட்டது