பக்கம்:மதன கல்யாணி-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133

எங்கேயோ ஒடிப் போய்விட்டான். மிகுதியாக நின்ற இந்த மனிதன் எங்களைக் கண்டவுடனே மரங்களில் மறைந்து மறைந்து ஒட ஆரம்பித்தான்; நாங்கள் இருவரையும் பிடிக்க வேண்டும் என்று நாலு பக்கங்களிலும் பிரிந்து போய் வளைத்துக் கொண்டோம். இவன் அப்போது தப்பியோடினான். இவன் பிடிபடாமல் இருளில் தப்பி ஓடிவிடுவானோ என்ற நினைவினால் துரைராஜா ரிவால்வரினால் சுட்டுவிட்டார். அது இவனுடைய காலில் பட்டதனால் இவன் உடனே விழுந்துவிட்டான். இன்னொருவன் காணப்படவில்லை. ஆகையால் இவனை மாத்திரம் தூக்கிக் கொண்டு வந்தோம்” என்றான். உடனே துரைராஜா சப் இன்ஸ்பெக்டரை நோக்கி, “இவனை வெளிச்சத்தில் பார்த்த பிறகு இவன் திருடனல்ல என்பது தெரிகிறது” என்றான்.

சப் இன்ஸ்:- அப்படியானால் இவன் யார்? துரைராஜா:- இவன் ஒரு வீணை வித்துவான். இவன் எங்களுடைய பங்களாவிலும் வீணை கற்றுக்கொடுக்க வந்து கொண்டிருந்தான். சில நாள்களுக்கு முன் நாங்கள் இவனை நிறுத்தி விட்டோம். அதுமுதல் இவன் எங்கள் பங்களாவுக்கே வந்த தில்லை. இன்றைக்கு மாத்திரம் ஏன் உள்ளே வந்தான் என்பது தெரியவில்லை.

சப் இன்ஸ்:- அது தெரிகிறவரையில் நாம் இவனைத் திருடன் என்று தான் பாவித்து மேல் நடவடிக்கைகள் நடத்த வேண்டும் - என்றார்.

அதைக் கேட்ட பசவண்ன செட்டியார், சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “ஐயா! இவர் என்னுடைய நண்பர் மிகவும் யோக்கிய மான மனிதர். இன்று சாயுங்காலம்கூட, நான் இவருடைய ஜாகைக்குப் போய், இவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அப்போது என்னிடத்தில் தெரிவித்ததென்ன என்றால், இன்றிரவு ஏழரை மணிக்கு மேல் எட்டுக்குள் தாம் இந்த பங்களாவில் உள்ள ஒரு மனிதரைப் பார்த்து அவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று இவர் சொன்னதோடு, அதன் சம்பந்தமாக தமக்கு ஏதோ ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் சொன்னார். ஆகையால் நான் இவருடைய காரியத்துக்கு இடைஞ்சலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/143&oldid=645890" இலிருந்து மீள்விக்கப்பட்டது