பக்கம்:மதன கல்யாணி-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143

தென்பதை உணர்ந்து, ஈரத்துணியால் முகத்தில் நன்றாக ஒற்றடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, தமது கம்பவுண்டரைக் கொண்டு, அவனது காலிலிருந்த காயத்தை நன்றாக அலம்பி மருந்து வைத்துக் கட்டுகள் போடச் செய்தார்; அதற்குள் அரை நாழிகை நேரம் சென்றது. மதனகோபாலன் தனது உணர்வைப் பெற்று, “அப்பா அம்மா” என்று புலம்பிக் கொண்டு தனது கண்களைத் திறந்து பார்த்தான். அதற்குள் டாக்டர் ஆயத்தமாக வைத்திருந்த ஒரு மருந்தைக் கையில் எடுத்து மதனகோபாலனது வாயைத் திறக்கச் செய்து, அந்த மருந்தை, அவன் அருந்தச் செய்த பிறகு சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “இனிமேல் கவலை இல்லை. இவர் இப்படியே இரவு முழுதும் தூங்கட்டும். நான் நாளைய தினம் காலையில் வந்து பார்க்கிறேன்” என்றார். அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் டாக்டரை நோக்கி, “ஐயா! இவருடைய ஜாகை கோமளேசுவரன் பேட்டையில் இருக்கிறது. இவரை வண்டியில் வைத்து அசையாமல் அந்த இடத்துக்குக் கொண்டு போவதனால் ஏதாகிலும் கெடுதல் நேருமோ?” என்றார்.

டாக்டர், “ஓ! கொண்டு போகலாம். அதனால் எவ்வித கெடுதலும் நேராது” என்றார். அதைக் கேட்ட பசவண்ண செட்டியார், “அப்படியானால் நாங்கள் இவரை இப்போது அங்கே எடுத்துக் கொண்டு போகிறோம். தங்களுடைய ஜாகைக்கு ஸ்ாரட்டை அனுப்புகிறோம். தங்களுடைய விலாசம் இன்ன தென்பதைத் தெரிவித்தால், காலையில் தங்களுடைய ஜாகைக்கு ஸாரட்டை அனுப்புகிறோம். தாங்கள் அதில் வரலாம்; தங்களுக்குச் சேரவேண்டிய மரியாதையையும் இப்போதே செய்து விடுகிறோம்” என்று கூறிய வண்ணம் தமது சட்டைப் பைக்குள் இருந்த நோட்டுக் கட்டை வெளியில் எடுத்தார். நூறு ரூபாய் முதல் 5-ரூபாய் வரையில் உள்ள நோட்டுக் கற்றைகள் ஒவ்வொரு பையிலும் திண்டு திண்டாகக் கிடந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து, அதில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை மிகவும் அலட்சியமாக எடுத்து, டாக்டரிடத்தில் மரியாதையாக நீட்ட, அவர், “இதற்கென்ன அவசரம்? பின்னால் பார்த்துக் கொள்ள லாமே” என்று கூறிய வண்ணம், அந்த நோட்டை வாங்கித் தமது

ம.க.H-40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/147&oldid=645895" இலிருந்து மீள்விக்கப்பட்டது