பக்கம்:மதன கல்யாணி-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மதன கல்யாணி

நிரம்பவும் சந்தோஷம்” என்றான். உடனே பசவண்ண செட்டியார் சப் இன்ஸ்பெக்டரை நோக்கி, “ஐயா! இந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ள சங்கதி இவர்களுடைய குடும்ப சம்பந்தமான விஷயம்; ஆனால் துரைராஜா அவர்கள் சந்தேகிப்பதைப் போல, இதில் வித்தியாசமான விஷயம் எதுவுமில்லை. ஆகையால் கடிதத்தை நீங்கள் மாத்திரம் படித்துப் பார்த்துவிட்டு வைத்து விடுங்கள். உடனே உங்களுடைய மனசுக்கும் ஒருவிதமான திருப்தி ஏற்பட்டுவிடும்; இவர் குற்றமற்றவர் என்பது தெரிவ தோடு, கடிதத்தில் உள்ள விஷயம் வேறு எவ்விதமான கெட்ட விஷயமுமல்ல என்பதும் நன்றாக விளங்கும்” என்றார்.

அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் உடனே கடிதத்தைப் பிரித்துத் தமக்குள்ளாகவே படித்துப் பார்த்துவிட்டு, அதை மறுபடியும் மடித்து உறைக்குள் போட்டு, மதனகோபாலனது சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு துரைராஜாவை நோக்கிய வண்ணம், “சரி; விஷயம் செட்டியார் அவர்கள் சொன்னபடியே தான் இருக்கிறது. ஆகையால் இந்த விஷயத்தில், நாங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்றார். -

அதைக் கேட்ட துரைராஜா ஒருவாறு திருப்தி அடைந்தானா கிலும், தனது தங்கை அந்த இரவில் அவனை எதற்காக வரவழைத்திருப்பாள் என்ற ஒரு பெருத்த சந்தேகமும், வியப்பும் அவனது மனதை வருத்த ஆரம்பித்தன; தான் அந்தக் கடிதத்தை அப்போது பார்க்காவிட்டாலும், பிறகாவது பசவண்ண செட்டியாரைக் கேட்டு அதை வாங்கிப் படித்துப் பார்க்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில், ஸ்டேஷன் வாசலில், ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. ஒரு டாக்டரும், அவரது கம்பவுண்டரும் அதற்குள் இருந்து கீழே இறங்கினார்கள். அவர்களை அழைக்கச் சென்ற ஜெவானும் பைசைகிளில் வந்து சேர்ந்தான். மதன கோபாலனுக்குத் தேவையான மருந்துகளும் வண்டியில் வந்து சேர்ந்தன. அவர்கள் மூவரும் மருந்துகளும் உள்ளே வர, டாக்டர் மதனகோபாலனது நாடியைப் பார்த்து, அவனது மூர்ச்சை தெளிந்து கொண்டிருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/146&oldid=645894" இலிருந்து மீள்விக்கப்பட்டது