பக்கம்:மதன கல்யாணி-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 145

வலியை உணராமல் இருக்கும் பொருட்டு, ஒரு வகையான போதையை உண்டாக்கியதாகையால், அவனது கைகளும், கால்களும், உடம்பும் நழுவி நழுவிச் சென்றன. ஆகவே, அவன் கீழே வீழ்ந்துவிடாமல், பசவண்ண செட்டியாரும், துரைராஜாவும் அவனது உடம்பை ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டே இருந்தனர். வண்டியும் சென்று கொண்டே இருந்தது; முதலில் ஒரு மயில் தூரம் வரையில், அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வித சம்பாஷணையும் செய்யாமல் மெளனமாகவே இருந்தனர். அதன்பிறகு துரைராஜா செட்டியாரை நோக்கி, “இந்த மனிதனுக்கு என்னால் அக்கிரமமாக இப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டது எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. இப்படிப்பட்ட இருட்டு வேளையில் இந்த மனிதன் தோட்டத்துக்குள் வந்திருப்பான் என்று, நான் சந்தேகிக்கவே இல்லை” என்றான். அதைக் கேட்ட செட்டியார் மிகுந்த விசனத்தோடு அவனை நோக்கி, “எல்லாம் வேளைப் பிசகினால் ஏற்படும் காரியமே யொழிய, என்னால் வந்தது, உன்னால் வந்தது என்று விசனப் படுவதில் என்ன உபயோகம் நீங்கள்தான் என்ன செய்வீர்கள்? உங்கள் மேல் குற்றமே இல்லை. நீங்கள் செய்தது நியாயமான காரியம். இம்மாதிரி அன்னியர் வீட்டுத் தோட்டத்துக்குள் போகக்கூடா தென்று, இவனே சொன்னான். இங்கே வருவதற்கு இவனுக்கு மனமே இல்லை; நான்தான் இவனை அனுப்பியவன். நியாயமாகப் பார்த்தால், என்னாலேதான் இந்த ஆபத்து இவனுக்கு ஏற்பட்ட தென்று சொல்ல வேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட துரைராஜா, அந்தக் கடிதத்தின் எழுத்திலிருந்து, அதை என்னுடைய தங்கை தான் எழுதி இருப்பாள் என்று நான் யூகித்துக் கொண்டேன். அப்படியானால், எங்களைக் கண்டு ஒடியது அவளாகத்தான் இருக்க வேண்டும்” என்றான்.

பசவண்ண செட்டியார், “ஆம்; அந்தக் குழந்தையாகத்தான் இருக்கும்; நல்ல வேளையாக, அந்தக் குழந்தை தப்பித்துக் கொண்டாளே; அது தெய்வச் செயல் என்றுதான் மதிக்க வேண்டும்; அந்தப் பெண்ணையும் நீங்கள் திருடன் என்று எண்ணிச் சுட்டிருந்தால், இந்நேரம் சகிக்க முடியாத துக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/149&oldid=645898" இலிருந்து மீள்விக்கப்பட்டது