பக்கம்:மதன கல்யாணி-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i56 மதன கல்யாணி

அதிசீக்கிரத்தில் மங்களகரமாக நிறைவேறிவிடும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அவ்விடத்திலிருந்து பொறுப்பாளி யான மனிதர் ஒருவரை அதிசீக்கிரத்தில் அனுப்பினால், முகூர்த்தப் பத்திரிகை தயாரித்து, அவரிடத்தில் கொடுத்து அனுப்பி வைக்கிறேன். மற்ற விஷயங்கள், தங்களுடைய கடிதம் பார்த்து. இங்ஙனம், பணிவுள்ள,

கல்யாணியம்மாள்.

-என்று, ஒரு கடிதம் எழுதி முடித்த ஜெமீந்தாரிணியம்மாள், ஒர் உறையிலும் மேல்விலாசம் எழுதி வைத்துவிட்டு, வெளியில் நின்ற தாதியை அழைக்க, அவள் உடனே உள்ளே வந்து அருகில் நின்றாள். அவளிடத்தில் அந்த உறையையும், கடிதத்தையும் கொடுத்து, அவைகளின் மூலைகளில் மஞ்சள் குறிகள் வைத்துக் கொண்டு கச்சேரி மண்டபத்திற்குப் போய் அரையனாத் தபால் தலை ஒன்று எடுத்துக் கொண்டு வரும்படி கல்யாணியம்மாள் கூற, வேலைக்காரி கடிதத்தையும் உறையையும் எடுத்துக் கொண்டு, அந்த அந்தப்புரத்தை விட்டு வெளியிற் சென்று எஜமானியம்மாளது உத்தரவுப்படி கடிதத்தின் மூலைகளில் மஞ்சள் குறி வைத்துக் கொண்டு தபால் தலை வாங்கும் பொருட்டு கச்சேரி மண்டபத்திற்குப் போக, அங்கே குமாஸ்தாக்களின் தலைமை குமாஸ்தா மாத்திரம் இருந்தார். வேலைக்காரி அவரிடத்திற்குப் போய், “எஜமானியம்மாளுக்கு அரையனாத் தபால் தலை ஒன்று வேண்டும்” என்று கேட்க, அவர் அவளது கையில் இருந்த மஞ்சள்குறி வைத்த கடிதத்தை வாங்கி, அவளுக்கெதிரில் உரக்கப் படித்துப் பார்த்தார். துரை எலானியம்மாளுக்குக் கலியாணம் நிச்சயமாகி இருக்கிறதென்பதைக் காணவே, அவர்கள் இருவரும் பெரிதும் சந்தோஷம் அடைந்த வர்களாய், அதைப்பற்றிச் சிறிது பேசிக் கொண்டிருந்தனர்; பிறகு குமாஸ்தா அரையனாத் தபால் தலை ஒன்று கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வேலைக்காரி திரும்பி வருகையில் அந்த பங்களாவில் உள்ள ஆண் பெண்பாலாரான ஏராளமான சிப்பந்திகள் வந்து அவளை வளைத்துக் கொண்டு, “என்ன சங்கதி என்ன சங்கதி” என்று கேட்போரும், கடிதத்தை அவளது கையிலிருந்து பிடுங்கிப் படிப்போருமாக அவளைத் தடுக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/160&oldid=645916" இலிருந்து மீள்விக்கப்பட்டது