பக்கம்:மதன கல்யாணி-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157

அவள், “எஜமான கோபித்துக் கொள்வார்கள், நேரமாகிறது; நான் போக வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி, அவர்களை எல்லாம் திருப்தி செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டாள். அதற்குள் அரை நாழிகை நேரம் கழிந்து விட்டது. அவள் கல்யாணியம்மாளது அந்தப்புரத்தை அடைந்த போது, அதன் வெளிக்கதவு சாத்தப் பட்டு, உட்புறத்தில் தாளிடப்பெற்றிருந்தது. அதைக் கண்ட வுடனே வேலைக்காரிக்குப் பெரிதும் வியப்பும் அச்சமும் உண்டாயின. தான் வருவதற்குத் தாமதமாயிற்றென்று, எஜமானியம்மாள் கோபித்துக் கொள்வாளோ என்ற சந்தேகமும் கவலையும் வருத்த ஆரம்பித்தன. தான் கச்சேரி மண்டபத்திற்குப் போய்விட்டு வருவதற்குள், கல்யாணியம்மாளிடத்தில் ரகசிய மாகப் பேசுவதற்கு யார் வந்திருக்கக்கூடும் என்று அவள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். அம்மாளுக்குத் தன் மீது கோபமோ அல்லது, வேறு எவரோடாகிலும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கிறார்களோ என்பதை அறிந்துவிட வேண்டும் என்ற ஒருவித ஆவல் அவளது மனத்திலெழுந்து அவளைத் தூண்டியது. ஆகவே, அவள் விரைவாக அந்த அந்தப்புரத்தைச் சுற்றிக் கொண்டு போய், அதன் பின்புற வாசற்கருகில் இருந்த ஒரு ஜன்னலண்டையில் நின்று, உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள். அந்த ஜன்னல், கல்யாணியம்மாளது கட்டிலிற்கு மிக அருகில் இருந்தமையால், அங்கே பேசப்பட்ட சொற்களெல்லாம் நன்றாகக் கேட்டன. அம்மாள் யாரிடத்திலோ மெதுவாக சம்பாஷித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. முதலில் பொன்னம் மாளது குரல் கேட்டது. பிறகு வேறொருத்தியின் குரல் உண்டாயிற்று. இடையிடையே கல்யாணியம்மாளும் பேசிய வார்த்தைகள் கேட்டன. பிறகு கல்யாணியம்மாள் இரும்புப் பெட்டியைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்த ஒசை கேட்டதோடு, அந்த அம்மாள், “இப்போது நான் கொடுப்பது பெரிதல்ல; நாளைய ராத்திரிக்குள் அந்தப் பத்திரத்தை எடுத்துக் கொணர்ந்து என்னிடத்தில் கொடுத்து விடும் பட்சத்தில், இன்னம் பதினாயிரம் ரூபாய் உடனே உனக்குத் தருகிறேன். இந்தக் காரியத்தை நீயே செய்தாலும் செய்; அல்லது கட்டையன் குறவனைக் கொண்டு செய்தாலும் எனக்குச் சம்மதந்தான். ஆனால், அவன் போவதாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/161&oldid=645918" இலிருந்து மீள்விக்கப்பட்டது