பக்கம்:மதன கல்யாணி-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 163

தலை வாங்க நான் கச்சேரி மண்டபத்துக்குப் போனேன்; அப்போது தான் பார்த்தேன்.

துரைஸானி:- (முன்னிலும் அதிக வியப்பும் கலக்கமும் அடைந்து) அந்தக் கடிதம் இப்போது எங்கே இருக்கிறது?

சின்னம்மாள்:- அதை நான் தபால் பெட்டியில் போட்டுவிட்டு தான் இப்போது நேராக இங்கே வந்தேன் - என்றாள்.

அந்த விபரத்தைக் கேட்டவுடனே துரைஸானியம்மாளது சந்திர வதனம் சஞ்சலமாகிய மேகத்தினால் களங்கமடைந்து மாறு பட்டது. அந்த மடந்தை விவரிக்க ஒண்ணாத பெருத்த வேதனையிலாழ்ந்தவளாய் சிறிது நேரம் ஏதோ சிந்தனை செய்த பிறகு மறுபடியும் வேலைக்காரியை நோக்கி, “இந்தக் கலியாணக் கடிதத்தை எழுதியது யார்?” என்றாள்.

சின்னம்மாள்:- எஜமானியம்மாளே எழுதினார்கள் போலிருக்

கிறது. நான் அதைக்% கவனிக்கவில்லை.

துரைஸானி:- இந்த மாதிரி கலியாணக் கடிதம் போகிறதென்பது குமாஸ்தாக்களுக்கெல்லாம் தெரியுமோ?

சின்னம்மாள்:- அந்தக் கூத்தை என்னவென்று சொல்லுவேன். நான் கடிதத்துக்கு மஞ்சள் குறிகள் வைத்து எடுத்துக் கொண்டு கச்சேரி மண்டபத்துக்குப் போனால், அங்கே இருந்த பெரிய குமாஸ்தா கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டார். அங்கே இருந்து நான் திரும்பி வரும்போது, நம்முடைய ஆள்மாகாணங்கள் எல்லோரும் வந்து என்னை வளைத்துக் கொண்டு, என்னுடைய கையில் இருந்த கடிதத்தைப் பிடுங்கி, ஒவ்வொருவராக எல்லோரும் படித்த பிறகு தான் அதைக் கொடுத்தார்கள். அதற்குள் அாை நாழிகை தாமசம் ஆய்விட்டது. எஜமானியம்மாள் கோபித்துக் கொள்ளுவார்களோ என்று நான் பயந்து கொண்டு ஓடினேன்; ஆனால் நல்ல வேளையாக, அதற்குள், வேறே யாரோ வந்து கதவைச் சாத்திக்கொண்டு அம்மாளிடத்தில் பேசிக் கொண் டிருந்தார்கள். அவர்கள் போனவுடனே நான் உள்ளே ஓடினேன்; எஜமானியம்மாள் கோபித்துக் கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/167&oldid=645929" இலிருந்து மீள்விக்கப்பட்டது