பக்கம்:மதன கல்யாணி-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 மதன கல்யாணி

2

இருந்தனர். அந்தத் தெருவில் உள்ள சாயப்புமார்கள் எல்லோரும்

மிகுந்த ஒற்றுமையும் கட்டுப்பாடும் உடையவர்களாக இருப்பது ற்றி, அது சுயராஜ்யம் பெற்ற ஒரு தனிநாட்டைப் போல அதிபல

g


முடையதாகவும், திருடர் பயம் போலீஸார் பயம் முதலிய எவ்வித பயமுமற்றதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட தெருவை அடைந்த நமது அப்துல்கணி ராவுத்தரது குதிரை வண்டி நெடுந்துரம் சென்று, அந்தத் தெருவின் நடுமத்தியி லிருந்த ஒரு பெருத்த மாடி வீட்டின் வாசலில் போய் நின்றது. உடனே அப்துல்கனி ராவுத்தரும் மோகனரங்கனும் கீழே இறங்கினார்கள். ராவுத்தர் வண்டிக்காரனுக்குச் சேர வேண்டிய வாடகைப் பணத்தைக் கொடுத்து, அவனை அனுப்பிவிட்டு, மோகனரங்கனையும் அழைத்துக் கொண்டு, அந்த வீட்டின் வாசற்படியில் ஏறி, மூடப்பட்டிருந்த கதவைத் தட்ட அது உடனே திறக்கப்பட்டது. கதவைத் திறந்த ஒரு வேலைக்காரி நடையில் நின்று கொண்டிருந்தாள். ராவுத்தர் அவளை நோக்கி, “சுந்தரம்பிள்ளை எங்கே?’ என்றார். உடனே அந்த வேலைக்காரி மிகவும் பணிவாக, “அவர்கள் உங்களுக்காக வீடு பார்க்க வெளியில் போயிருக் கிறார்கள். இந்த வீட்டின் கீழ்பாகம் காலி செய்யப்பட்டிருப்பதால் உங்களை கீழே இறக்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்; உங்களுடைய சாமான் எல்லாம் கூடத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சாமான் எல்லாம் கூடத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய சம்சாரமும் உள்ளே இருக்கிறார்கள். ஐயா இன்னமும் அரை நாழிகைக்குள் வந்து விடுவார்கள். அவர்களுடைய சம்சாரம் மேல் மாடியில் இருக்கிறார்கள். அவர்களுடைய தம்பியும் உங்களோடு வருவதாக, அம்மாள் சொன்னார்கள். தம்பி வந்தால், அவரை மேன்மாடிக்கு அழைத்து வரும்படி, அவளுடைய தமக்கையர் சொன்னார்கள்” என்றாள். அதைக் கேட்ட ராவுத்தர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தவர் போல நடித்து, “அப்படியானால் சரி; இதோ நிற்கிறாரே இவர்தான் அந்த அம்மாளுடைய தம்பி; இவரை மேலே அழைத்துக்கொண்டு போ; நான் வாசல் கதவை மூடிக் கொண்டு உள்ளே போகிறேன்” என்று கூறிய வண்ணம், வாசற் கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டார். உடனே அந்த வேலைக்காரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/186&oldid=645967" இலிருந்து மீள்விக்கப்பட்டது