பக்கம்:மதன கல்யாணி-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... )  : x:x :y::

200 மதன கல்யாணி

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைத் தனக்குள்ளாகவே படித்துக் கொண்ட துரைராஜா மிகுந்த திகைப்பும் வியப்பும் கொண்டான் ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், எதிரில் நின்று கொண்டிருந்த குப்பம்மாளை நோக்கி, “சரி; தி போகலாம்” என்றான்.

உடனே குப்பம்மாள் வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்ட வளாய் வெளியே போய்விட்டாள்.

உடனே துரைராஜா மேஜையின் மீதிருந்த காகித மூட்டையை எடுத்து அதன்மேல் கட்டப்பட்டிருந்த கயிறுகளையும், அரக்கு முத்திரைகளையும் விலக்கிவிட்டு, காகிதங்களை எல்லாம் பிரிக்கவே, உட்புறத்தில் வெள்ளைக்காரியின் உடைகள் தென் பட்டன; அவன் அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்க்க, அவைகள் துரையம்மாள் என்ற பொய்ப் பெயர் கொண்டு வந்து, பார்க் உத்தியான வனத்தில் தன்னோடு பேசி விட்டுப் போன பெண்ணினால் அணிந்து கொள்ளப்பட்டிருந்த உடைகளே என்பது சந்தேகமற நிச்சயமாக விளங்கியது. உடனே அவன் அவைகளை எல்லாம் முன்போலவே மடித்து வைத்து, காகிதங்களாலும் கயிற்றினாலும் மூட்டையாகக் Li அதை எடுத்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்துப் பூட்டிய பின், முன் போல உட்கார்ந்து கொண்டான். கால் நாழிகை நேரம் வரையில், அவனது மனம் தெளிவுபடாமல் மிகவும் குழம்பி இருந்தமையால், அவன் ஸ்தம்பித்துப் போய் அப்படியே உட்கார்ந்திருந்தான். முதல் நாளைய இரவிலிருந்து அவனை வதைத்து வாட்டிக் கொண்டிருந்த மோகனாங்கியின் நினைவு முழுதும் சடக்கென்று மாறிப் போயிற்று; தன்னை பார்க் உத்தியான வனத்தில் சந்தித்தவள் யாராய் இருப்பாள் என்ற சந்தேகமே, மனதிலெழுந்து வருத்தத் தொடங்கியது, அவளால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களிலிருந்த அற்புதமான விஷயங் களும், அவளது அபூர்வமான சம்பாஷணையும் அவனுக்கு மிகவும் புதுமையாகவும் எங்கும் நடக்காத அசம்பாவித சங்கதிகளாகவும் இருந்தன. அந்த உடைகள் மாரமங்கலம் கல்யாணியம்மாள் பெட்டிக்குள் இருந்த விஷயமே, அவனுக்கு அதிவிந்தையாக இருந்தது. வெள்ளைக்காரி போல வேஷந்தரித்து வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/204&oldid=646002" இலிருந்து மீள்விக்கப்பட்டது