பக்கம்:மதன கல்யாணி-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மதன கல்யாணி

நிவர்த்தியாகட்டும்” என்று கூறிய வண்ணம், தமது சட்டைப் பைக்குள்ளே இருந்த இன்னொரு கடிதத்தை எடுத்து துரைராஜா விடத்தில் நீட்ட, அவன் மிகுந்த ஆவலோடு அதை வாங்கிப் பிரித்துப்படித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. வாத்தியார் அவர்களுக்கு அநேக நமஸ்காரம் செய்து வணக்கமாக எழுதிக் கொள்ளும் விக்ஞாபனம்.

ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களிடம் நேரில் தெரிவிக்க விரும்புகிறேன் ஆகையால், நீங்கள் இன்று சாயுங் காலம் ஏழரை மணிக்கு மேல் எட்டுமணிக்குள்ளாக, எங்களுடைய பங்களாவின் பின்புறத் தோட்டத்திலிருக்கும் ஆலமரத்தடியில் வந்திருக்கும்படி பிரார்த்திக்கிறேன். தோட்டத்தின் பின்புற வேலியில் படலினால் மூடப்பட்ட வழி ஒன்றிருக்கிறது. அந்தப் படலின் கட்டை அவிழ்த்து அதைத் திறந்து கொண்டு சுலபமாக உள்ளே வரலாம். உங்களை எவரும் பார்க்கவும் மாட்டார்கள். நீங்கள் வருவதைக் கண்டாலும் தடை செய்யாமலிருக்கும்படி தோட்டக்காரனிடம் நான் சொல்லி வைக்கிறேன். இப்படி ரகசியமாக நீங்கள் உள்ளே வருவதும், நாம் இருவரும் சந்திப்பதும் தவறான காரியம் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பதை நான் அறிவேன். ஆபத்துச் சமயத்தில் பாபம் பார்க்கக்கூடாதென்று சொல்லுவார்கள். அதைப் போல விஷயம் அதிக அவசரமானதும், நிரம்பவும் விபரீதமானது மாதலால், நீங்கள் இதற்குப் பின் வாங்க வேண்டாம். நான் அந்த ஆலமரத்தடிக்கு வந்து அதிக நேரம் காத்திருக்க எனக்கு அவகாசம் கிடைக்கா தாகையால், காலம் தவறாமல் நீங்கள் அவசியம் வந்திருக்க வேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இன்று நீங்கள் அங்கே வரமுடியாமற் போனால், இன்றிரவு நான் இறந்து போய்விட்டேன் என்ற செய்தியை நீங்கள் நாளைய தினம் காலையில் அவசியம் கேட்பீர்கள். உங்களுடைய மனசுக்குப் பிடிக்காத ஒரு காரியத்தைச் செய்யும்படி நான் துணிந்து கேட்டுக் கொள்வதைக் குறித்து என்னை மன்னிக்கும்படி பன்முறையும் வேண்டுகிறேன். இந்தக் கடிதத்தின் எழுத்தைக் கொண்டே, நான் யார் என்பது உங்களுக்கு எளிதில் தெரிந்து விடும் ஆகையால் இதை கையொப்பமில்லாமல் அனுப்பி இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/236&oldid=646063" இலிருந்து மீள்விக்கப்பட்டது