பக்கம்:மதன கல்யாணி-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239

எல்லோரும் அழும்படியான இந்தப் பஞ்ச காலத்தில் இப்படிப்பட்ட பெருத்த விருந்துக்கு அழைப்பதை யாராவது வேண்டாம் என்று சொல்லுவார்களா? நீங்களும் வந்து உட்காருங் கள்; இரண்டு பேருமாகச் சாப்பிடுவோம்” என்று கூறிய வண்ணம் எழுந்து, சிற்றுண்டித் தட்டுகளிருந்த மேஜைக்கருகில் வந்து, பக்கத்தில் கிடந்த நாற்காலிகளுள் ஒன்றன்மேல் உட்கார, துரைராஜாவும் வந்து பக்கத்திலிருந்த ஜலத்தை எடுத்து, அவர் தமது கைகளைச் சுத்தம் செய்து கொள்வதற்கு அதை வார்த்து, அதன் பிறகு தின்பண்டங்களை எல்லாம் பெரும் பாகங்களாக எடுத்து அவருக்கு முன்னால் வைத்து மிகுதியைத் தானும் வைத்துக் கொள்ள, இருவரும் சந்தோஷமாகப் பேசிய வண்ணம், அந்த இன்பகரமான வேலையைச் செய்யத் துவக்கினர்.

அப்போது துரைராஜா மிகுந்த உற்சாகத்தோடு அவரை நோக்கி, “மைசூரில் தாங்கள் நிரம்பவும் ருசியான மிட்டாய்களையும் உயர்ந்த பலகாரங்களையும் சாப்பிட்டவர்கள். இந்த ஊரில் செய்யப்படும் பதார்த்தங்கள் அவ்வளவு சுகமானவையாக இருக்கிறதில்லை; என்ன செய்கிறது! நீங்களும் எங்களுர் மனிதர் ஆகிவிட்டபடியால், நாங்ன் சாப்பிடுவதைத் தான் நீங்களும் சாப்பிட வேண்டும்” என்றான்.

அதைக் கேட்ட செட்டியார் சந்தோஷமாக நகைத்து, “ஏன் இந்த பட்சணங்களுக்கென்ன குறை? எல்லாம் நன்றாக இருக்கிறதே. ஆனால், நம்மோடு கூட இருந்து சாப்பிட இன்னமும் பல நண்பர்கள் இல்லையே என்பது தான் ஒரு குறை; அதைத் தவிர, வேறே ஒரு குறையுமில்லை” என்றார். உடனே துரைராஜா, “சரி சரி, அந்தக் குறையை நாளைய தினம் நிவர்த்தி செய்து விடுகிறேன்; உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால், சந்தோஷம் அதிகம். ஆண்பிள்ளைகளாக இருப்பது சுகமா? அல்லது பெண் பிள்ளைகளாய் இருப்பது சுகமா?” என்றான்.

அதைக் கேட்ட செட்டியார் கரைகடந்த ஆனந்த பரவசம் எய்திப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவர் போல நடித்து, “எனக்கு எப்போதும் பெண் பிள்ளைகளோடு கூட சந்தோஷமாக விளை யாடிக் கொண்டிருப்பது தான் பிடிக்கும்; ஆனால், அவர்கள் அதிக வயசானவர்களாக இருக்கக்கூடாது; இருபது வயசுக்கு மேற்பட்ட

வர்களே உதவாது” என்றார்.

ம.க.H-15'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/243&oldid=646078" இலிருந்து மீள்விக்கப்பட்டது