பக்கம்:மதன கல்யாணி-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249

என்றாள். அதைக் கேட்ட அந்தப் பெண்மணி அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு, திறவுகோலை வாங்கிக் கொண்டு துரைஸானியம்மாளது அந்தப்புரம் போய்ச் சேர்ந்தாள். உடனே கல்யாணியம்மாள் நான்கு தாதிகளை அழைத்து, அவர்களுக்கு அவ்வாறே கட்டளையிட்டு, துரைஸானியம்மாளை விட்டகலாமல் அவளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கண்டித்துக் கூறி, தான் அடிக்கடி வந்து பார்க்கப் போவதாகவும், யாராவது தமது கடமையில் தவறி இருந்ததைக் கண்டால், உடனே அபராதம் போட்டு விடுவதாகவும் பயமுறுத்தி அனுப்பி வைத்தாள்.

அவ்வாறு கல்யாணியம்மாள் அவர்கள் எல்லோரையும் அனுப்பிய பின், துரைஸானியம்மாள் எவ்வித முரண்டலும் செய்யாமல் படிந்திருக்கிறாள் என்ற செய்தியை வேறொருத்தியின் மூலமாக அறிந்து கொண்டு, ஒருவாறு திருப்தி அடைந்தவளாய், உட்கார்ந்து, அன்றைய காலைத் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்திலே தான் எதிர்பாராவிதமாக, துரைராஜா அங்கே வந்து, அவளைக் கலக்கி மறுபடியும் நரக வேதனையில் ஆழ்த்திவிட்டுச் சென்றான். அவன் சென்ற பின் கால் நாழிகை நேரம் வரையில் நிரம்பவும் வதைபட்டிருந்த கல்யாணியம்மாள், உடனே தனது பணிப் பெண்ணைக் கூப்பிட்டு, பொன்னம்மாளை அழைத்து வரும்படி ஆக்ஞாபிக், அவள் வெளியிற் போய், அடுத்த நிமிஷத்தில் பொன்னம்மாளை உள்ளே அனுப்பினாள்.

கரைகடந்த விசனத்தினால், தலை சாய்ந்து தடுமாறி உட்கார்ந் திருந்த கல்யாணியம்மாள், தனது பக்கத்தில் பொன்னம்மாள் வந்து நிற்கிறாள் என்பதை உணர்ந்து மெதுவாக நிமிர்ந்து அவளது முகத்தை உற்று நோக்கி, “என்ன பொன்னம்மா! நான் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது நிறைவேறுகிறதில்லை. அதோடு போகாமல், நமக்கு அதனால் பெருத்த பொல்லாங்கும் வந்து நேருகிறது. நேற்று நீ போய்க் கருப்பாயியை அழைத்து வந்தாயே. அந்த விஷயம் நம்முடைய பங்களாவில் உள்ள வேறே யாருக்காவது தெரியுமா?” என்று நயமாகவும் கவலை யோடும் வினவினாள்.

அந்தச் சீமாட்டியின் விசனத் தோற்றத்தைக் கண்டு அவளது வார்த்தைகளைக் கேட்ட பொன்னம்மாள் மிகுந்த கவலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/253&oldid=646098" இலிருந்து மீள்விக்கப்பட்டது