பக்கம்:மதன கல்யாணி-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மதன கல்யாணி

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கடிதங்களையும், தான் கையெழுத்துச் செய்ய வேண்டிய துண்டுக் காகிதங்களையும் வாங்கிக் கொண்டு வரும்படி பொன்னம்மாளை வெளியிலே அனுப்பி வைத்தாள். மாரமங்கலம் என்பது நிரம்பவும் பெருத்த சமஸ்தானம் ஆகையால், அதில் குடிகளிடத்திலிருந்தும் சர்க்கார் கச்சேரிகளிலிருந்தும், ரிஜிஸ்டர் செய்யப்பட்ட கடிதங்கள் அடிக்கடி அந்தச் சீமாட்டிக்கு வருவதும், அவள் கையெழுத்துச் செய்து விட்டு அவற்றை வாங்குவதும் வழக்கம் ஆதலால், கல்யாணியம்மாள் அதைப்பற்றி எவ்விதமான கவலையும் கொள்ளாமல், சாதாரணமாக நினைத்து, மைனரது விஷயத்தி லேயே தனது சிந்தனை முழுதையும் செலுத்தினவளாக இருந்தாள்.

வெளியில் சென்ற பொன்னம்மாள் கடிதங்களையும் துண்டுக் காகிதத்தையும் வாங்கிக் கொண்டு வந்து வழக்கம் போல மேஜையின் மீது வைக்க, அதற்குள் பஞ்சணையை விட்டுக் கீழே இறங்கி வந்த கல்யாணியம்மாள், மேஜைக்கருகில் உட்கார்ந்து துண்டுக் காகிதங்களில் கையெழுத்தைச் செய்து பொன்னம்மாளி டத்தில் கொடுத்து, “இதைக் கொண்டு போய் தபால்காரனிடத்தில் கொடுத்துவிட்டு வந்து, இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு ஜாக்கிரதையாக இரு நான் ஸ்நான அறைக்குப் போய் முகம் சுத்தி செய்து கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பின்புற வாசலின் வழியாக அப்பால் போய்விட்டாள். கைச்சாத்துகளைப் பெற்றுக் கொண்ட பொன்னம்மாள் விரைவாக வெளியில் சென்று வாசற்படிக்கு அப்புறத்தில் நின்று கொண்டிருந்த தபாற்காரனிடத் தில் அவைகளைக் கொடுத்துவிட்டு, உடனே திரும்பி வந்து பஞ்சணைக்கருகில் இருந்த ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தபடி எஜமானியம்மாளது வருகையை எதிர்பார்த்திருந்தாள்.

பின்புற வாசலின் வழியாக வெளியில் சென்ற கல்யாணியம் மாள் தனது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, புதிய உடைகள் தரித்து நெற்றியில் விபூதியணிந்து காப்பி முதலிய சிற்றுண்டிகளில் சிறிதளவு உண்டபின், துரைஸானியம்மாளது அந்தப்புரத்திற்குச் சென்று அன்றைக்கும் முதல் நாள் போல துரை ஸானியம்மாள் எங்கும் நடமாடாமல் உள்ளே இருக்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/266&oldid=646123" இலிருந்து மீள்விக்கப்பட்டது