பக்கம்:மதன கல்யாணி-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மதன கல்யாணி

கின்றனவோ என்று பார்த்தாள். அவைகளுள் ஒரே ஒரு கடிதத்தில் மஞ்சட்குறிகள் வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டவுடனே கல்யாணியம்மாளது முகம் மிகுந்த சந்தோஷத்தினால் மலர்ந்தது. மன மகிழ்ச்சி அடைந்தது; தேகம் பூரித்தது. அவள் உடனே பொன்னம்மாளை நோக்கி, ‘பொன்னி ஈஸ்வரன் இப்போது தான் நம்முடைய விஷயத்தில் கிருபாநோக்கம் வைத்தார் போலிருக்கிறது நல்ல காலந்தான் எப்படியாவது இந்த துரைஸானியம்மாளுடைய பெயர் கெடாமல் இவள் தன்னுடைய புருஷன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டால், என்னுடைய கவலையில் முக்கால் பங்கு விலகிப் போய்விடும்; அப்புறம் மைனரைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை; அவன் ஆண் பிள்ளை; அவனைப் பற்றி யாரும் அவ்வளவாகத் துற்ற மாட்டார்கள். ஆகையால், இந்தக் கலியாணம் நிச்சயமான மாதிரிதான். முகூர்த்தத்தை இன்னம் ஒரு வாரத்திற்குள்ளாகவே நடத்திவிட வேண்டும். நாம் இன்றைய தினமே இந்தப் பீடை பிடித்த ஊரைவிட்டு மாரமங்கலம் போய்ச் சேர்ந்துவிட்டால், இந்தக் கலியாணம் ஆண்மாதிரிதான் என்று கதரைகடந்த குதூகலமும் உற்சாகமும் அடைந்து மெய்ம்மறந்து கூறிய வண்ணம் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு மற்றவைகளை அப்பால் போட்டுவிட்டு அதை ஒரு பக்கமாகக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை வெளியில் இழுத்துப் பிரித்து அந்த விஷயத்தைப் பொன்னம்மாளும் கேட்டு ஆனந்தங் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓங்கிப் படிக்கலானாள். அந்தக் கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாள் அவர்களுக்கு,

மோகனரங்கன் செங்கல்பட்டுக்குப் போகவில்லை. அவன் துரைஸானியம்மாளை எப்படியும் உங்களுடைய பங்களாவி லிருந்து அழைத்துப் போய், நாளைய தினம் இரவு ஒன்பது மணிக்குள் அவளுக்குத் தாலிகட்டத் தீர்மானித்து விட்டான். நீங்கள் எவ்விதமான பக்கபலத்தோடு இருந்தாலும், அவனுடைய எண்ணம் நிறைவேறாமல் தடுக்க, அந்த ஈசுவரனாலும் முடியாது; நீங்களும்கூட இருந்து சந்தோஷமாக இந்தக் கலியாணத்தை முடித்து வைக்க விருப்பமா, அல்லது, உங்களுடைய தகவலின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/268&oldid=646126" இலிருந்து மீள்விக்கப்பட்டது