பக்கம்:மதன கல்யாணி-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 மதன கல்யாணி

அப்படிச் செய்ததுமன்றி அவர்கள் அவன் மேலேயே பழியை எல்லாம் சுமத்தி அவனுடைய பெயரையும் பிழைப்பையும் கெடுத்துவிட்டார்களே. அவர்கள் கேவலம் விதவை. அவர்கள் விபசார தோஷத்துக்குப் பாத்திரமாகலாமா? அவர்கள் அப்படிச் செய்ததனால் எவ்வளவு கெடுதல் உண்டாகிவிட்டது தெரியுமா? ஒரு யெளவனப் புருஷன் மேல் நெடுநாளாக என் மனம் சென்று கொண்டே இருந்தது. அம்மாளிடத்தில் நான் வைத்திருந்த பயபக்தியினால் இதுவரையில் நான் என் மனசை அடக்கிக் கொண்டிருந்தேன். அம்மாளே ஒருவன் மேல் மோகங்கொண்டு துரத்தியதைக் கண்டவுடனே என்னுடைய பயமெல்லாம் போய் விட்டது. நான் ஆசை வைத்திருந்த அந்த அழகான பையனிடத்தில் நான் உடனே சிநேகம் செய்து கொண்டேன். அதை அம்மாள் கண்டு கொண்டார்கள். அந்த விஷயத்தில் அம்மாள் என்னைக் கண்டிக்க அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? அவர்கள் சுத்தமாக இருந்தால், என்னைக் கண்டிக்க அவர்களுக்கு யோக்கியதை உண்டு. அவர்களே அசுத்தர்களாக இருக்கையில், அவர்கள் வெளிக்கு மாத்திரம் சுத்தமாக நடிப்பதைக் கண்டால், அது எனக்கு மிகுந்த கோபத்தைத் தருகிறது.

கோமளவல்லி:- சிவசிவா! நீ சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தை யும் கன்ன கடுரமாக இருக்கிறதே! அக்கா! நீ இவ்வளவு கொடிய வளாக மாறிப் போவாய் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. அம்மாள் மதனகோபாலன் விஷயத்தில் தவறான எண்ணத்தோடு நடந்து கொண்டதாக நீ சொல்வதற்கு எவ்வித மான ஆதாரமுமில்லை. அது உன்னுடைய யூகமேயன்றி வேறல்ல. ஏதோ சில சந்தேகத் தோற்றங்களைக் கொண்டு நீ அந்த மாதிரி நிச்சயிப்பது நியாயமாகாது. நீ நல்ல விவேகியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், இன்னமும் சொற்ப காலம் பொறுமையோடிருந்து, அவர்களுடைய நடத்தையைக் கவனித்து, சந்தேகமற ஆராய்ந்து அதன் பிறகு அவர்கள் விஷயத்தில் கெட்ட அபிப்பிராயம் கொள்ள வேண்டும். அப்படிக் கெட்ட அபிப்பிராயம் கொண்டாலும், உன்னுடைய கடமை என்ன? உன்னால் கூடுமானால் நீ அவர்களைச் சரியான வழிக்குத் திருப்ப முயலவேண்டும். இல்லையானால் நீ அதைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/278&oldid=646146" இலிருந்து மீள்விக்கப்பட்டது