பக்கம்:மதன கல்யாணி-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 மதன கல்யாணி

இருக்கிறாய் என்றும் நினைத்து உன்னிடத்தில் மோகித்திருக்கும் அந்தக் கள்ளப்புருஷன் நீ நாளைக்கு ஏழையாகப் போய்விட்டாய் என்பதையும், மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்றபடி உன்னிடத்தில் உள்ள சுகம் இவ்வளவு தான் என்பதையும் கண்டு உன்னை வெறுத்து விலக்கிவிடுவானானால் அதன் பிறகு நீ என்ன செய்வாய்? எப்படி இருந்தாலும், ஒரு புருஷனை சாஸ்திரப்படி கலியாணம் செய்து கொள்வதைப் போன்ற நிரந்தரமான காரியமும் உறுதிப்பாடும் மற்றவைகளில் இருக்குமா? ஒருவனை சாஸ்திரப்படி கட்டிக் கொண்டவளுக்கு இப்படிப்பட்ட இழிவும் அவமானமும் என்றைக்காவது ஏற்படுமா? உன்னுடைய சுயக்காரியத்தையும், பிற்காலத்து க்ஷேமத்தையும் கூட நினையாமல் ஆத்திரப்பட்டு இப்போதைய அற்ப சந்தோஷத்தைக் கருதி இவ்வளவு பெருத்த தவறைச் செய்த உன்னை யாராவது விவேகி என்று சொல்லுவார்களா? உன்னைப் பெருத்த அகங்காரி என்று சொல்லுவார்களேயன்றி, நீ மகா புத்தி சாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய் என்று இவ்வளவு பெருத்த உலகத்தில் ஒருவர்கூட உன்னைப் புகழ்ந்து கொண்டாட மாட்டார்கள். இப்படி மதியினமாக நடந்து கொண்டிருக்கும் நீ, நம்மைவிட எவ்வளவோ அதிக அனுபோகசாலியான நம்முடைய தாயைப்பற்றிக் கெட்ட அபிப்பிராயம் கொடுத்தால், அதற்கு ஏதாவது மதிப்பு ஏற்படுமா? ஒருநாளும் ஏற்படாது; அதிருக் கட்டும்; நீ ஒரு புருஷனைப் பிடித்துக் கொண்டதை அம்மாள் கண்டு கொண்டதாகச் சொன்னாயே? அதன் பிறகு இந்தத் தலைவலி வேஷம் எதற்காகப் போட்டாய்?

துரைஸானி:- ஒகோ நீகூட அம்மாளைப் போல தரும சாஸ்திர மூட்டைகளை அவிழ்க்கக் கற்றுக் கொண்டு விட்டாயா! இனிமேல் பரவாயில்லை; அம்மாளைப் போல நீயும் நன்றாக வெளி வேஷம் போடலாம். நீங்கள் எல்லோரும் உள்ளொன்றும் புறமொன்றுமாக நடக்கிறவர்கள்; நான், மனம் எதை நினைக்கிறதோ அதை மறைக்காமல், அதன்படி காட்டிக்கொள்ளக் கூடியவள்; அம்மாள் ரகசியத்தில் எத்தனையோ துன்மார்க்கமான காரியங் களைச் செய்துவிட்டு, வெளிப்பார்வைக்கு மகா சுத்தமான மனிஷி போல நடக்கிறதை எல்லாம் நான் அறிவேன்; எனக்கு அப்படி நடப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/280&oldid=646151" இலிருந்து மீள்விக்கப்பட்டது