பக்கம்:மதன கல்யாணி-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285

முடியும்; ஆகையால், அவளுக்கு நாம் ஏதாவது ஜீவனாம்சம் மாத்திரம் சொற்பத் தொகை கொடுத்துவர நேரும்; அவள் அதோடு (போகட்டும்; பாலாம்பாளை இன்றைய தினம் தூக்கிக் கொண்டு போவதாகக் கட்டையன் குறவன் சொல்லி விட்டுப் போனான் என்று பொன்னம்மாள் சொல்லக் கேள்விப்பட்டேன்; அந்தக் காரியம் நடக்க நாம் இடம் கொடுக்கக் கூடாது; ஏனென்றால், நேற்றைய தினம் அவள் காணாமல் போய்விட்டாள் என்றால், பிறகு நம்மேல் தான் சந்தேகம் ஏற்படும் அதனால் விண் உபத்திர வங்கள் நேரும். ஆகையால், நீங்கள் முதலில் ஒரு காரியம் செய்யுங்கள் இந்தப் பொன்னம்மாளை மறுபடியும் இப்போது உடனே அனுப்பி, பாலாம்பாளைத் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கருப்பாயியிடத்திலும் கட்டையணிடத்திலும் சொல்லிவிட்டு வரச் செய்யுங்கள்’ என்றார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் ஒருவாறு துணிவடைந்தாள். பத்திர விஷயத்தில் அவளது மனதை வதைத்துக் கொண்டிருந்த சஞ்சலங்கள் குறைவுபட்டன. அவள் உடனே எழுந்து வண்டிச் செலவுக்குப் பணம் கொடுத்துப் பொன்னம்மாளை வெளியில் அனுப்பிவிட்டுக் கதவை முடித் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்து திரும்பவும் உட்கார்ந்து சிவஞான முதலியாரது முகத்தை நோக்கினாள். உடனே முதலியார் அவளைப் பார்த்து, இந்தக் கடிதத்தைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறீர் களா? இதில் எழுதப்பட்டிருக்கிறபடி காரியம் நடந்து விடும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? அந்த மோகனரங்கன் ஒர் அனாதைப் பையன். அவனுக்கு அக்காள் ஒருத்தி இருக்கிறாள். அவள் அடையாற்றில் பெண்கள் பள்ளிக்கூடத்தில் வாத்திச்சியாக இருக்கிறாளாம். அவளைத் தவிர, இந்த மோகனரங்கனுக்கு வேறே மனிதரே இல்லை. அவன் செங்கல்பட்டுக்குப் போகாமல் நடுவழியில் இறங்கி வந்திருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட விபரீதமான காரியத்தை நிறைவேற்ற அவனால் முடியுமா? இந்தக் கடிதம் அவனால் எழுதப்பட்டதாகவே தோன்றவில்லை. உங்கள் மனசைப் புண்படுத்த வேண்டும் என்று ஒருவேளை இது மைனராலாவது, அல்லது, வேறே மனிதராலாவது எழுதப்பட்ட தாக இருக்கலாம். இதைப்பற்றி உங்களுக்கு எவ்விதக் கவலையும் வேண்டாம்” என்று அழுத்தமாகக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/289&oldid=646167" இலிருந்து மீள்விக்கப்பட்டது