பக்கம்:மதன கல்யாணி-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297

கொண்டிருந்தாள்; ஆனால், பார்ப்பதற்காக மாத்திரம் முகத்தில் கண்களுக்கு நேராக இரண்டு துளைகள் விடப்பட்டிருந்தன; ஆகையால், அவளது தோற்றம் துருக்க ஜாதி ஸ்திரீயின் தோற்றமாக இருந்தது; அவளது உடம்பிலிருந்த துப்பட்டி நிரம்பவும் அழுக்கடைந்ததாக இருந்ததாகையாலும், அவளது கையில் இருந்த ஊன்று கோல் அநாகரீகமான விறகு குச்சியாக இருந்ததாகையாலும், அவள் வெள்ளிக்கிழமை தினங்களில் துருக்கரது மசூதிகளின் வாசலில் பிச்சை கேட்பதற்காக உட்கார்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரி போலக் காணப்பட்டாள்; அவள் அடிக்கடி மாரமங்கலத்தாரது பங்களாவின் பக்கம் திரும்பிப் பார்ப்பதும், ராஜபாட்டையின் இருபுறங்களையும் பார்ப்பதுமாக இருந்தாள்: அப்போது சிவஞான முதலியாரும் கல்யாணி யம்மாளும் பங்களாவை விட்டு வெளியில் வந்தார்கள் இன்ஸ் பெக்டர் அவர்களுக்குச் சொல்லி வைத்திருந்ததற்கிணங்க அவர்கள் நிரம்பவும் பயந்து கலவரமடைந்து சோர்ந்திருந்தவர்கள் போல நடித்து மெல்ல நடந்து ராஜபாட்டையை அடைந்து திரும்பித் திரும்பி அங்குமிங்கும் பார்த்தனர். வேறே எவரும் வருவதாகத் தெரியவில்லை; பிச்சைக்காரி போலக் காணப்பட்ட அந்தத் துருக்கப் பெண்பிள்ளை தங்களது விஷயத்தில் சம்பந்தப் பட்டவளாக இருக்க மாட்டாள் என்ற சந்தேகம் உண்டானதாகை யால், அவர்கள் அவளைப் பொருட்படுத்தாமல் மேலும் கால் நாழிகை நேரம் வரையில் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றனர். மணி ஆறேகால் ஆயிற்று: உடனே கல்யாணியம்மாள் மெல்ல நடந்து தபாற் பெட்டியன்-ை வந்து, அந்தத் துருக்கப் பெண்பிள்ளையை உற்று நோக்கி, “யார் அம்மா அது? ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?” என்று நயமாக வினவினாள்.

அதைக் கேட்ட அந்தப் பைண்பிள்ளை கோலை ஊன்றிக் கொண்டு எழுந்து குனிந்து நின்றவண்ணம், “இந்த பங்களாவிலே இருக்கிற அம்மாள் ஒரு கடிதம் கொடுக்கப் போகிறார்கள். அதை வாங்கிக் கொண்டு போகிறதற்காக இங்கே உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் தான் அந்த அம்மாளா? அப்படியானால் ஏதாவது கடிதம் கொடுப்பதானால் கொடுங்கள். நான் புறப்பட்டுப் போகிறேன்” என்று நடுக்கலான குரலில் கிழவி பேசுவது போலப் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/301&oldid=646194" இலிருந்து மீள்விக்கப்பட்டது