பக்கம்:மதன கல்யாணி-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மதன கல்யாணி

இதற்கெல்லாம் உங்களுக்கு உதவியாக இருப்பது யார்? என்ற எல்லா விவரங்களையும் சொல்; நாங்கள் அந்த மனிதரை வரவழைத்து ஒருவிதமாக சமாதானப்படுத்திக் கொள்ளுகிறோம். மோகனரங்கன் இப்போது எங்கே இருக்கிறான் என்பதையும் சொன்னால், அவனுக்கு மறுபடியும் நல்ல வேலையாகப் பார்த்து அவனை அமர்த்தி வைக்கிறேன். முன்பின் யோசனை செய்து பேசு” என்று நயமாகக் கூறினார்.

ராஜாயி அம்மாள், “இந்தக் கடிதம் மோகனரங்கனாலே தான் எழுதப்பட்டது. எங்களுக்கு வேறே யாரும் உதவி செய்ய வில்லை. உங்களைப் பயமுறுத்துகிறதற்காக இந்தக் கடிதம் சும்மா எழுதப்பட்டது. அவ்வளவுதான் சங்கதி” என்றாள்.

சிவஞான முதலியார், “அப்படியானால் குப்பம்மாள் மூலமாக ஒரு கடிதம் எழுதி ரகசியமாக துரைஸானியம்மாளுக்கு அனுப்ப வேண்டிய காரணம் என்ன? நீங்கள் அவளையும் பயப்படுத்த வேண்டிய அவசியமில்லையே?” என்றார்.

ராஜாயி அம்மாள், “அதென்னவோ அந்தச் சங்கதி எனக்குத் தெரியாது. ஒருவேளை மோகனரங்கன் அனுப்பியிருக்கலாம். அதைப் பற்றி அவனைத்தான் கேட்க வேண்டும்” என்றாள். அது வரையில் மிகுந்த பொறுமையோடிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபமடைந்து, “வக்கீல் ஐயா! மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது. அதற்குச் சரியான பக்குவம் செய்தால்தான் போடும்; இவள் சாதாரண மனுஷியல்ல; மகா நெஞ்சழுத்தம் உடையவளாகவும் சட்டமெல்லாம் கற்றவளாகவும் இருக்கிறாள். நீங்கள் இன்றைய ராத்திரி முழுதும் நயந்து வேண்டினாலும் இவள் உண்மையை வெளியிடக் கூடியவளல்ல. ஆகையால், நான் இவளை இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய், மந்திரம் போட்டு, உண்மையைக் கிரகித்துக் கொண்டு, இவளையும் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு வருகிறேன். பங்களாவில் ஒரு பெட்டி வண்டி இருந்தால், உடனே குதிரையைப் பூட்டச் செய்யுங்கள்” என்றார்.

சிவஞான முதலியார் மறுபடி அவளை நோக்கி, “என்ன ராஜாயி, நீ வீணாக உபத்திரப்படப் போகிறாய். நாம் வளர்த்த குழந்தை யாயிற்றே என்ற பாசம் இன்னமும் என் மனசில் போராடுகிறது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/310&oldid=646213" இலிருந்து மீள்விக்கப்பட்டது