பக்கம்:மதன கல்யாணி-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மதன கல்யாணி

அவனது வார்த்தையைக் கேட்டு ஒருவாறு வியப்பும் சந்தோஷமும் உற்சாகமும் அடைந்த மைனர் கடிதத்தை ஆவலோடு வாங்கிப் பிரித்து வாசிக்கத் தொடங்கினான்; அந்தக் கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:கிருஷ்ணாபுரம் சின்ன ஜெமீந்தாரான துரைராஜாவுக்கு

நான் ஒரு பெருத்த ஜெமீந்தார் வீட்டுப் பெண். நான் இன்னமும் புருஷ சுகத்தையே அறியாதவள். என்னைக் காட்டிலும் அழகில் சிறந்தவள் இல்லை என்று எல்லோரும் என்னைக் கொண்டாடுவ தன்றி, எப்படிப்பட்ட மகாராஜாவின் மகன்கூட, என்னுடைய ஒரு புன்சிரிப்புக்காக மாத்திரம் தன்னுடைய உடல் பொருள் ஆவி முதலிய சகலத்தையும், நான் உதட்டை அசைக்குமுன், என் காலடியில் வைத்துவிடுவான். அப்படிப்பட்ட மேலான ஸ்திரியான எனக்கு எந்தப் புருஷனிடத்திலும் ஆசை என்பதே ஏற்பட வில்லை. இந்த உலகத்தில் புருஷராகப் பிறந்தவர்களில் நீர் ஒருவர் தான் என்னுடைய ஆசை முழுதையும் கொள்ளை கொண்டு விட்டீர்; நான் அணைத்தால் உம்மையே அணைவதன்றி, என்னுடைய உயிரை விட்டு விடுவதே சரியான காரியம் என்று நினைத்து விட்டேன். மனசைவிட்டு கால் நாழிகை நேரமாகிலும் உம்மோடு பேசி என் மனசில் உள்ளதை வெளியிட வேண்டும் என்று எனக்குப் பெருத்த ஆசையாக இருக்கிறது. எங்களுடைய பங்களாவுக்கு நீர் வருவதும், உம்முடைய பங்களாவுக்கு நான் வருவதும், நாம் ஒருவருக்கொருவர் சிநேகம் செய்து கொள்ளாத தற்கு முன், சரிப்படாதென்று நினைக்கிறேன். இன்றைய தினம் பார்க் பேர் காட்சி ஆரம்பமாகிறது; அங்கே சோலைக்குள் நாம் இருவரும் சந்தித்து தாராளமாகப் பேசி எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் பிரியப்படுகிறேன். யெளவனப் பெண்ணான நானும், யௌவனப் புருஷரான நீரும் நம்முடைய சொந்த உடைகளோடு ஒளிந்தொளிந்து பேசினால், பிறர் சந்தேகங் கொள்வார்கள் அல்லது நமக்குத் தெரிந்தவர்கள் நாம் பேசுகிறதைக் கண்டுகொள்வார்கள். ஆகையால், நாமிருவரும் ஒரு தந்திரம் செய்வோம். நான் வெள்ளைக்கார துரைஸானியைப் போல தொப்பி முதலிய சகலமான உடைகளையும் அணிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/34&oldid=646246" இலிருந்து மீள்விக்கப்பட்டது