பக்கம்:மதன கல்யாணி-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர்கே துரைசாமி ஐயங்கார் 51

அதைக் கண்ட துரைராஜா, “ஆகா இந்தத் துஷ்டனா அந்த இடத்திலும் இடைஞ்சலாக இருக்கிறான். இங்கே என்னுடைய தங்கையின் மனசைக் கலைத்த அயோக்கியனல்லவா இவன். சரி, எவ்விதமான விரோதமுமின்றி ஒரு மனிதனை எப்படி அடிக்கிற தென்று நான் முன் நினைத்ததற்கு இப்போது இவனே வந்து வாய்த்ததும் நன்மைதான். இவனைத் தண்டிப்பது பாவமாகாது; தங்கை விஷயத்தில் இவன் நடந்து கொண்டதற்கு நான் இவனைத் தண்டிப்பது நியாயமானதே” என்று தீர்மானித்துக் கொண்டு உடனே புறப்பட்டு கோமளேசுவரன் பேட்டையை நோக்கிச் சென்றான்.


16-வது அதிகாரம் புதுமோகம்

அவ்வாறு துரைராஜா மதனகோபாலனுக்குத் துன்பமிழைக்கும் பொருட்டு கோமளேசுவரன் பேட்டைக்குப் போன தினத்தின் காலையில், கல்யாணியம்மாள் தனது அந்தப்புரத்தில், ஒரு கட்டிலின் மேல், தேக அசெளக்கியத்தோடு சயனித்துக் கொண்டிருந்தாள். அவள் ஒரு பெருத்த சால்வையால் தனது கால் முதல் தலை வரையில் நன்றாகப் போர்த்திக் கொண்டிருந்ததன்றி, அவளது நெற்றியிலும் நெற்றிப்பூட்டுகளிலும், பசைகளால் கனமான பற்றுப் போடப்பட்டிருந்தது. கடுமையான ஜூரமும், தலை நோவும் கொண்டவள் போல, அந்தச் சீமாட்டி, முக்கி முனகிய வண்ணம் படுத்திருந்தாள். அவளது குமாரனான மைனர், அவனது சயனக்கிரகத்தில் இருந்ததால், அவனை அவசரமாக அழைத்து வரும்படி, சிறிது நேரத்திற்கு முன் உள்ளே நுழைந்து கட்டிலண்டையில் வந்து நிற்க, அவளைக் கண்ட கல்யாணியம் மாள், “என்னடி தம்பி வரவில்லையா?” என்றாள். அதைக் கேட்ட வேலைக்காரி, “இல்லை, வருகிறார்; அவர் நேற்று ராத்திரி பார்க் பேர் வேடிக்கைகள் பார்த்துவிட்டு ஒருமணிக்கு வந்து படுத்தாராம்: இப்போதுதான் எழுந்திருந்தார். அவரே இங்கே அவசரமாக வர நினைத்திருந்தாராம். தாங்களும் அழைத்ததாக நான் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/55&oldid=646291" இலிருந்து மீள்விக்கப்பட்டது