பக்கம்:மதன கல்யாணி-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மதன கல்யாணி

மைனர்:- உங்களுடைய கையெழுத்தையும் பத்திரத்தில் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவள் அப்படி மாற்றிச் சொல்லி இருக்கலாம்.

கல்யாணி:- தம்பீ அவள் மகா ஜெகஜாலப் புரட்டுக்காரியாக இருக்கிறாள். அவளுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் மோசக்கருத்தானதாகவே இருக்கிறது. நியோ கள்ளம் கபடம் ஒன்றும் தெரியாத குழந்தைப் பையன். நீ போய் அப்படிப்பட்ட மலையாள பகவதியுடைய வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாய். அவள் உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு இன்னம் எவனாவது அவளுடைய மனசுக்குப் பிடித்த பெரிய மனிதன், அவளுடைய சிநேகத்தில் பிரியப்பட்டால், அவள் ஏதாவது பெருத்த கேசுகளில் உன்னை மாட்டி வைத்து விடுவாள். ஆகையால் நீ அவளிடத்தில் சிநேகமாய் இருப்பது என் மனசுக்குக் கொஞ்சமும் சம்மதமாக இல்லை. இப்போது தான் நீ அவளோடு இரண்டொரு நாள் இருந்து பழகிவிட்டாயே; ஒரு நாள் பழகினாலும் அது தான்; ஆயிரங்காலம் பழகினாலும் அது தான். அதுவும் தவிர, அவளுக்குப் பழைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறாராம். அவரையும் அவள் சுலபத்தில் விட்டு விடுவாள் என்று நான் நினைக்கவில்லை. ஆகையால் அவளால் உனக்குப் பெருத்த தீங்கு சம்பவிக்கும் முன் நீ விலகிக் கொள்வதே நல்லது.

மைனர்:- சரி சரி அழகாக இருக்கிறது பிரசங்கம்! அவளுடைய பெருந்தன்மையும் கண்ணிய புத்தியும் யாருக்கு வரும்! அவளுடைய உண்மையான யோக்கியதையை அறிந்து கொள்ளாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசினால், அதனால் என்ன உபயோகம்? அவள் என்மேல் வைத்திருக்கிற பிரியத்துக்கு இந்த உலகத்திலேயே இணை இருக்காதே. நான் கிணற்றில் விழு என்றால், அவள் உடனே விழுந்து உயிரை விடுவாளே; அப்படிப்பட்ட உயிருக்குயிரான பெண்ணை நான் இனி விட்டுவிடுவேனோ? இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் யார் எதைச் சொன்னாலும் நான் கேட்கத் தயாராக இல்லை. எனக்காக அவள் எப்பேர்ப்பட்ட காரியம் செய்தாள் தெரியுமா? அந்தப் போலீஸ்காரர்கள் எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/64&oldid=646309" இலிருந்து மீள்விக்கப்பட்டது