பக்கம்:மதன கல்யாணி-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மதன கல்யாணி

அதைக் கொண்டு நாங்கள் உண்மையான திருடர்களைப் பிடிக்க, ஒரு சூசனை ஏற்படும்” என்றார்.

அதைக் கேட்ட பாலாம்பாள், “இந்த ஊரில் எனக்குப் பகையான வர்கள் வேறு ஒருவருமில்லை. ஆனால் இப்போது காரியம் நடந்திருப்பதைப் பார்த்தால், என்ன மனிதரால்தான் இந்தக் கொள்ளை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் உதிக்கிறது. இதோ நிற்கிறாரே கிழவர். இவராலேயே இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்” என்றாள்.

அதைக் கேட்ட கிழவனுடைய உடம்பு பயத்தினால் கிடுகிடென்று ஆடியது; அவனுடைய முகத்தில் பிரேதங்களை வந்து முடிக்கொண்டது. அவன் ஒன்றும் சொல்லமாட்டாமல், திருடனைப் போல முழிக்கிறான். ஜனங்கள் எல்லோரும் திகைப் படைந்து அவனையே உற்றுப் பார்க்கிறார்கள்; அப்போது சப் இன்ஸ்பெக்டர் பாலாம்பாளைப் பார்த்து “இதுவரையில் உனக்கு அன்னியோன்னிய சிநேகிதராக இருந்த இவர் மேல் நீ சந்தேகப்பட வேண்டிய காரணம் என்ன?” என்றார். உடனே பாலாம்பாள், “நான் இவருடைய நாடகத்தில் முக்கிய ஸ்திரீ வேஷம் போட்டுக் கொள்ளுகிறவள். இந்தக் கிழட்டு மனிதருக்கு நெடுநாளாக என் மேல் துராசை இருந்து வந்தது. அதை இவர் பல தடவைகளில் வெளியிட்டும் அதற்கு நான் இணங்கவில்லை; கடைசியாக நான் இந்தப் புருஷரைத் தேடிக்கொண்டேன். அதை உணர்ந்த இந்தக் கிழட்டு மனிதர், இந்தக் கொள்ளை நடந்த தினத்துக்கு முதல் நாள் என்னைத் தனியாக அழைத்து, “நான் எவ்வளவோ கெஞ்சியும், நீ கடைசியாக இன்னொருவனைப் பிடித்துக் கொண்டு விட்டாயே! நான் உன்மேல் வைத்திருக்கிற பிரியம் இன்னமும் மாறவே இல்லை; எனக்கு 50-லட்சத்துக்கு ஆஸ்தி இருக்கிறது. அதை எல்லாம் உனக்கே கொடுத்து விடுகிறேன். எப்படியாவது நீ தீர்க்காலோசனை செய்து, புதிய மனிதனைத் தள்ளிவிடு; இல்லா விட்டால் நான் எப்படியும் உன்னை விடமாட்டேன். நீயும் அவனும் ஒன்றாகக் கூடி இருக்கும்படி நான் விடமாட்டேன். அந்த மனிதனுக்கு நீ இடங்கொடுத்தால், அவனை நீ இனி காணாதபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/70&oldid=646321" இலிருந்து மீள்விக்கப்பட்டது