பக்கம்:மதன கல்யாணி-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மதன கல்யாணி

போதெல்லாம் பணம் கறந்து விடலாம் என்ற எண்ணத்தோடு, மிகவும் ஒய்யாரமாக நடந்து போய் மேஜையின் மீதிருந்த நோட்டு களை எடுத்து, அலட்சியமாக மடித்துத் தனது சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டு, “சரி பத்திரம் எழுதிக்கொடுத்து இன்றைக்கு ஐந்து நாளாகிறது. இன்னம் ஐந்து நாளைக்குள், அவளுக்கு வேண்டிய நகைகளை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். நாளைக்காவது, மறுநாளாவது நான் திரும்பி வருவேன். இருபத்தையாயிரம் ரூபாய் தயாராக இருக்கட்டும்; தயாராக இல்லாவிட்டால், பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து கொடுத்து விடுவேன்” என்று கூறிவிட்டு, வெளியில் போய்விட்டான்.

கல்யாணியம்மாளது மனதில், அதற்கு முன்னிருந்த சங்கடங் களுக்குத் துணையாக இன்னொரு புதிய துன்பம் வந்து சேர்ந்தது; மைனர் பாலாம்பாள் மீது கொண்டிருந்த மோகாவேசத்தில், பத்திரத்தை ரஜிஸ்டர் செய்து கொடுத்து விடுவானோ என்ற பெருத்த கவலை எழுந்து வருத்தத் தொடங்கியது. அதே சிந்தனை யாக, அந்த அம்மாள் கால் நாழிகை நேரம் சயனித்திருந்தாள். மைனர் போன வரையில் வெளியில் நின்று கொண்டிருந்த தாதி, உடனே உள்ளே வந்து சேர்ந்தாள். கல்யாணியம்மாள் அவளை நோக்கி, “அடி! நீ நம்முடைய குமாஸ்தா மோகனரங்கனிடத்தில் போய், கடிதம் எழுதுவதற்குக் காகிதம், மைக்கூடு, இறகு ஆகிய இவற்றை எடுத்துக் கொண்டு இங்கே உடனே வரும்படி சொல்லி அனுப்பிவிட்டு, நீ வாசலில் இரு” என்றாள். அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு தாதி வெளியில் போய் விட்டாள். கல்யாணியம்மாள் தனது துன்பங்களையும் துரதிர்ஷ்டங்களையும் நினைத்து நினைத்து சகிக்கலாற்றாத துயரை அடைந்தவளாய்ப் படுத்திருந்தாள். தான் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதிலிருந்து தனக்குப் புதிய புதிய துன்பங்கள் விளைவதையும், ஒரு சிறிய தீங்கை விலக்கும் பொருட்டு தான் ஒரு தந்திரம் செய்தால் அது, முன்னிலும் அதிக விபத்தான பெரிய துன்பத்தில் தன்னைக் கொண்டு போய் விடுவதையும் நினைத்த கல்யாணியம்மாள் தனது காலபலனை நிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில், மோகன ரங்கன் என்ற குமாஸ்தா காகிதம் முதலிய எழுது கருவிகளோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/76&oldid=646332" இலிருந்து மீள்விக்கப்பட்டது