பக்கம்:மதன கல்யாணி-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மதன கல்யாணி

இருக்கிறேன். ஆகையால் நீங்களும், குழந்தை கண்மணி யம்மாளும், நான் மேலே சொல்லியிருக்கும் காரணங்களைக் கருதி, என்மேல் ஆயாசப்படாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

இங்ஙனம்:

அன்புள்ள,

கல்யாணியம்மாள்.

-என்று எழுதப்பட்ட கடிதத்தை, மோகனரங்கன், ஒரு முறை படித்துக் காட்டி, கட்டிலண்டை வந்து அம்மாளது கையெழுத்தை அடியில் பெற்றுக் கொண்டு மேஜைக்குச் சென்றான். அதன் மோகனரங்கன் அந்த கடிதத்தை மடித்து, ஓர் உறைக்குள் புகுத்தி, உறையின் வாயை ஒட்டி, அதன் மீது மேல்விலாசம் எழுதினான்.

அப்போது கல்யாணியம்மாள், அவனை நோக்கி, “மோகன ரங்கம்! இந்தக் கடிதம் மிகவும் முக்கியமானது. வேலைக்காரர் களிடம் கொடுத்தால், ஒருகால், அவர்கள் இதை உடனே கொண்டு போய் அங்கே சேர்க்கமாட்டார்கள். ஆகையால், நீயே இதை எடுத்துக் கொண்டு நேரில் அவர்களுடைய பங்களாவுக்குப் போய், மீனாகூஜியம்மாளிடத்தில் கொடுத்துவிட்டு, அவர்கள் சொல்லும் மறுமொழியைக் கேட்டுக்கொண்டு வா; நான் எப்படி இருக்கிறேன் என்று அவர்கள் கேட்பார்களானால், கடுமையான ஜூரம், தலை நோவோடு படுத்திருப்பதாகச் சொல்; நான் சொல்லுவது தெரிகிறதா?” என்றாள். -

அதைக் கேட்ட மோகனரங்கன், அம்மாளது உத்தரவுப்படியே நடந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு, வாசலை நோக்கி இரண்டோரடி எடுத்து வைக்க, அதற்குள் எதையோ நினைத்துக் கொண்ட கல்யாணியம்மாள் அவனை அழைத்து, “அடே மோகனரங்கம் நம்முடைய மைனர் தம்பி இங்கே இருந்து இப்போதுதான் வெளியில் போனார்; நான் இந்த நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை ஒத்தி வைப்பது அவருக்கு இஷ்டமில்லை; அவர் இந்தக் கடிதத்தைக் கண்டால், வாங்கி, ஒருவேளை கிழித்துப் போட்டாலும் போட்டு விடுவார். ஆகையால் நீ ஒரு காரியம் செய்; அவர் போன இந்த வாசல் வழியாக நீ போகவேண்டாம். இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/80&oldid=646341" இலிருந்து மீள்விக்கப்பட்டது