பக்கம்:மதன கல்யாணி-3.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 மதன கல்யாணி வளாகக் கிடப்பதாகவும் வேலைக்காரர்கள் கூறினர், அதைக் கேட்ட மைனரும் பாலாம்பாளும் திடுக்கிட்டு அந்த விஷயத்தில் பெருத்த கவலையும் அச்சமும் கொண்டனர். அவளை அடித்துக் கட்டி சமுத்திரத்தில் போட்டது தாங்கள் தான் என்பதை கருப்பாயி வெளிப்படுத்தியே திருவாள் என்ற நினைவும், அப்படி அவள் வெளியிடுவாளாகில், கொலை செய்ய முயன்ற குற்றம் தங்கள் மீது சுமரும் என்ற நினைவும் அச்சமும் உடனே தோன்றின. ஆனால், தாங்கள் அவ்வாறு செய்ததை எவரும் பார்க்கவில்லை ஆகையால், தக்க சாட்சியமில்லை என்று சர்க்காரில் ஒருகால் தங்களை விட்டுவிட்டாலும், அந்த விஷயத்தைக் கேள்வியுறும் கட்டையன் குறவன் தங்களை எப்படியும் கொன்றே தீருவான் என்ற ஒரு பெருத்த திகில் அவர்களது மனதில் உண்டாகிவிடடது. அதனால் அவர்கள் இருவரும் நெடுநேரம் வரையில் சகிக்க இயலாத கவலை கொண்டவர்களாய் வருந்தி இருந்து, கடைசியில் அவளைக் கொன்றுவிடுவதே உசிதமானதெனத் தீர்மானித்துக் கொண்டனர். அவ்வாறு, தாங்கள் அவளைக் கொல்வது தங்களது வேலைக்காரர்களுக்குத் தெரியக்கூடாதென்றும், அந்தப் பகல் கழிந்தவுடனே இரவில் மைனரே நேரில் போய் அந்தக் கொலையை நடத்த வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. ஆனால், அவள் அன்றைய பகலிற்குள் அந்த பங்களாவை விட்டுப் போய்விடுகிறாளோ என்பதையும், போலீசார் அழைக்கப் படுகிறார்களோ என்பதையும் கவனிக்கும்படி, அவர்கள் தந்திரமாக ஒர் ஆளை அனுப்பி அந்த பங்களாவிற்கெதிரில் நிறுத்தி வைத்திருந்தனர். வேறோர் ஆளையும் தந்திரமாக அந்த பங்களா விற்குள் அனுப்பி, கருப்பாயி என்ன நிலைமையில் இருக்கிறாள் என்பதையும், எந்த இடத்தில் படுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் அறிந்து கொண்டனர். இரவும் வந்தது; உடனே இருளும் சூழ்ந்து கொண்டது. பாலாம்பாள் மைனரிடத்தில் ஒரு பீச்சாங்கத்தியைக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு, மேன் மாடத்திற்குப் போய், ஜன்னலின் வழியாகப் பார்த்துக் கொண்டே இருந்தாள். மைனர் கத்தியும் கையுமாக இருளில் மனோகர விலாஸ் பங்களாவிற்குள் நுழைந்து ஏராளமாக நிறைந்திருந்த பூந்தொட்டி களின் மறைவில் ஒளிந்தொளிந்து எவரும் தன்னைக் காணாதபடி