பக்கம்:மதன கல்யாணி-3.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121 அப்போது தான் சார்ஜாண்டு துரையின் ரூபத்திலிருந்து வெளிப் பட்ட ராஜாயியம்மாளுக்கும் ஜெமீந்தாருக்கும் நடந்த சம்பாஷணை முடிவுற்றது. சப் இன்ஸ்பெக்டரும் அவரோடு வந்த ஜெவான் களும் பங்களாவிற்குள் போய், கருப்பாயி படுத்திருந்து குத்தப் பட்ட இடம் முதலியவற்றைப் பார்த்துக் கொண்டதன்றி, மதன கோபாலன், சில ஆட்கள் ஆகிய சிலரது வாக்குமூலங்களையும் வாங்கிக் கொண்டு, அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். கருப்பா யியின் வாக்குமூலத்திலும் மதனகோபாலனது வாக்குமூலத்திலும், மைனரும், பாலாம்பாளும கருப்பாயியை அடித்துக் கட்டிக் கடலில் போடட விவரமெல்லாம சொல்லப்பட்டிருந்தமையால், பாலாம்பாள் உடந்தைக் குற்றவாளி என்பது நிச்சயமாகப்பட்டதாகையால், சப் இன்ஸ்பெக்டா நேராக சாயுஜ்ய நிலையத்திற்குப் போய் பாலாம் பாளையும் கைது செய்து அழைத்துக் கொண்டு மைலாப்பூர் ஸ்டேஷனுக்குப் போயச் சேர்ந்தார். சேர்ந்தவர் குற்றவாளிகள் இருவரையும் ஒருவரோடொருவர் பேசமுடியாத படி தனித்தனி யான அறைகளில் விடுத்துப் பூட்டினர். குற்றவாளிகள் இருவரும் தாங்கள் எவ்விதக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும், தங்களுக்குக் கருப்பாயி என்பவளையே தெரியாதாகையால், அவளைத் தாங்கள் கொல்லவே நியாய மில்லை என்றும் சொலலிவிட்டனர். மைனர், மதனகோபாலன் என்னும் வீணைவித்துவான் அயோக்கியத்தனமாக நடந்து கொணடதைக் கருதி தான் அவனைத் தங்களது பங்களாவில் இருந்து நீக்கிவிட்டபடியாலும், அதை உணர்ந்த மற்ற எல்லா பங்களாக்களிலும் உள்ள ஜனங்களும் அவனை விலக்கிவிட்ட படியாலும், அநதப் பகைமையைப் பாராட்டி அதற்காகப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் கருத்தோடு, அவனே அந்தக் கிழவியைக் குத்திவிடடு அப்படிப்பட்ட அபாண்டமான கட்டுக் கதையைச் சொல்லுகிறான் என்று கூறினான். ஆனால், கருப்பாயி யும் தனக்கு விரோதமாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள் என்பதையே மைனர் அறியாவதவன் ஆகையால் அவன் யாவற்றையும் மதனகோபாலன் மீது போட்டு, தான் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆகையால் அவன் தான் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விஷயத்தைத்