பக்கம்:மதன கல்யாணி-3.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 145 படியால், எனக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டுப் போய்விட்டது. நான் என்னுடைய ஊரில் இருந்தால் அவளுடைய நினைவு உண்டாகிக் கொண்டே இருக்கும் என்றும், ஆகையால், நான் எங்கேயாவது துரமான தேசத்தில் போய் இருந்து கொள்வது நல்லதென்றும் டாக்டர் சொன்னார். அதனால் தான் மைசூருக்குப் போனேன். பா. குரோட்டன்:- அப்படியா! நல்லது; தங்களுடைய குழந்தை கள் இறந்து போய்விட்டன என்று வக்கீல் சிவஞான முதலியார் எழுதிய செய்தியை உணர்ந்த உடனே தங்களுடைய துக்கம் முன்னிலும் பன்மடங்கு அதிகமாகப் பெருகியிருக்க வேண்டுமே? கி. ஜெமீந்தார்:- ஆம்; அதைச் சொல்லவும் வேண்டுமா! ஏற்கெனவே என்னுடைய மனம் உடைந்து போயிருந்தது. குழந்தைகள் இறந்து போன சங்கதி தெரிநதவுடனே என்னுடைய உயிர் அநேகமாகப் போயவிட்டது. அதுமுதல் நான் நடைப் பிணம் போல இருந்து வருகிறேன். பா. குரோட்டன்:- (மிகவும் துக்கிப்பதாக நடித்து) ஐயோ பாவம்! அருமையாக இருந்த சம்சாரமும் குழந்தைகளும் போய்விட்டால், அது சாதாரணமாகப் பொறுக்கக்கூடிய விஷயமே அல்ல. தாங்கள் 7, 8-மாசத்துக்கு முன் இநத மதனகோபாலனையும் அவனுடைய தங்கையையும் இந்த ஊருக்கு அனுப்பியதுகூட அந்த மனோ வியாதியினாலே தானோ? கி. ஜெமீந்தார்:- ஆம், அந்த விசனம் இன்னமும் மாறாமலே இருந்து வருகிறது. இந்த மதனகோபாலனையும், இவனுடைய தங்கையையும் பார்க்கும் போதெல்லாம், என்னுடைய குழந்தை கள் சம்சாரம் முதலியோரை இழந்த துயரம் என்னை வதைப்ப தால், சொற்பகாலம் அவர்களை இந்த ஊருக்கு அனுப்பிப் பார்க்கலாம் என்றும் நினைத்து அனுப்பி வைத்தேன். பா. குரோட்டன்:- அப்படியா! நல்ல காரியம் செய்தீர்கள்; பதினைந்து வருஷ காலமாக ஒருவருடைய மனசு புண்பட்டு வருந்துவதெனறால், அந்த மனசு அழுத்தமான மனசாக இருந்தா லன்றி, அது நல்ல நிலைமையில் இருக்காது. தாங்களோ தங்களு டைய சமசாரம இறந்தகாலம் முதலாகவே பைத்தியங் கொண்டவர்