பக்கம்:மதன கல்யாணி-3.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160 மதன கல்யாணி வராமெ யாருக்கிட்டவாச்சும் வித்துப்புடலாமின்னு, அதெ எடுத்துக்கினே வந்தானாம். பாதயோடெ போன ஒரு ஐயா அந்தக் கொயந்தெயெப் பாத்து ஆசெப்பட்டு ஆயிரம் ரூபா குடுத்து அதெ வாங்கிக்கினு போயித்தாருன்னும், தான் கொயந்தெயெக் கொன்னுப் புட்டதாவ சின்னத்தொரெ ஐயாகிட்டச் சொல்லி அடெயாளங் காட்டி ஏமாத்தி, பாக்கி பணத்தெயும் வாங்கிப்புட்ட தாகச் சொல்லி நொம்ப சந்தோசமா இருந்து அந்நெக்கி ராவெல்லாம் எங்க வூட்டுலெயெ குடிச்சுப்புட்டுப் படுத்திருந்தான். புள்ளெயெ வாங்கின ஐயா எழுதிக் குடுத்தாருன்னு சொல்லி ஒரு சின்ன ரோகாவெ எங்கிட்டக் குடுத்துப் பத்தரமா வச்சிருக்கச் சொன்னான். அதெ அப்பாலெ அவன் மறந்தே பூட்டான். பதினெஞ்சு இருவது நாளெக்கிப் பொறவாலே நான் ஒரண்டே மருத்துவம் பாக்கறத்துக் காவத் தேனாம்பேட்டெக்கிப் போயிருந்தேன். அப்ப மாரமங்கலம் வங்களாவுலெ, காணாமெப் போன கொயந்தயோடெ அம்மாளும் பொன்னம்மாங்கற ஒரு தாதியும் வந்திருந்தாவளாம். அந்தப் பொன்னம்மா நான் மருத்துவச்சி இங்கற சங்கதியெ அறிஞ்சுக்கினு என்னெத் தனியா அளெச்சிக்கினு போயி மாரமங்கலத்தாரு வூட்டுப் புள்ளெ திருட்டுப் பூடிச்சுங்கற சங்கதியெ எங்கிட்டச் சொல்லி, மூணு வயசுலெ அநாதெப்புள்ளே ஏதுவாச்சும் அம்பிட்டுக் கொண்டாந்து குடுத்தா, அஞ்சாயிரம் ரூபா தாரேனுன்னு சொன்னா. என் மனசுலெ அப்ப ஒரு ரோசனை உண்டாச்சு. எனக்கும் கொறவனுக்கும் பொறந்த புள்ளெக்கி அப்பகிட்டத்தட்ட மூணு வயசு ஆயிருந்திச்சு: அதெயெ குடுத்துப்புட்டு அஞ்சாயிரம் ரூவாயெயும் தட்டிக்கிடலாமுன்னு எண்ணிக்கிட்டேன்! ஒடனெ அவளெக் கையோடெ இட்டுக்கினு எங்க வூட்டுக்குப் போயி என்னொடெ புள்ளெயெக் காட்டினேன். அந்தப் பொன்னம்மா கொயந்தெயெ உத்துப் பாத்து, "இதெயெ நான் வாங்கிக்கிறேன். ஆனா இதுலெ ஒரு சங்கதி; ஜெமீந்தாரம்மா திருட்டுப் போன தன்னோடெ சொந்தக் கொயந்யெயே தேடிக் கொண்டாரணுமின்னும், அப்பிடிக் கொண்டாந்தா அஞ்சாயிரம் ரூவா குடுக்கறேனுன்னும் சொல்லி இருக்காங்க. நாங்க தேடாத எடமெல்லாம் தேடிப் பாத்தோம். எங்கெங்கனெயோ பொலம் வெசாரிச்சுப் பார்த்தோம்; ஒண்னும்