பக்கம்:மதன கல்யாணி-3.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170 மதன கல்யாணி முயற்சி பலியாமற் போனதைக் கண்டு பெருத்த பணத்தொகை களைச் செலவு செய்து, பிரபலமான பாரிஸ்டர்களை அமர்த்தி பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டின் கச்சேரியிலும், ஹைகோர்ட்டிலும் வாதாடச் செய்து மைனரை ஜாமீனில் விடவும், நகல்கள் பெறவும், முயற்சித்தும், எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனதும், கடைசியாக அவர்கள் விசாரணைத் தேதியை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்ததும் முன்னரே தெரிந்த விவரங்கள். மைனர் கொலைக் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்ற செய்தியை அறிந்த பிறகு கல்யாணியம்மாளுக்குத் தனது மூத்த குமாரத்தி ஒடிப்போன துன்பமும் ஒரு பொருட்டாகவே தோன்ற வில்லை. ஒரு பெருத்த காட்டானை ஒரு மனிதனை வளைத்துக் கொண்டு துரத்துகையில், பாம்பென்றும், தேளென்றும், முள்ளென்றும், புதரென்றும் அஞ்சாமல், அந்த மனிதன் எப்படி விழுந்து பயந்து ஒடுவானோ அதுபோல மைனருக்கு நேர்ந்த விபத்திற்கு முன் மற்றவை மிகவும் அற்பமாகத் தோன்றின. கருப்பாயி ஏதோ ரகசியங்களை வெளியிட்டிருக்கிறாள் என்ற வதந்தியும் உலாவி அவள் வரையில் எட்டியதாகையால், அந்த விஷயத்திலும் அவள் திகில் கொண்டு குலை நடுக்கம் அடைந்திருந் தாள்; மைனர் கொலைக் குற்றத்திற்காக தண்டனை அடைந்தால், அதோடு தன்னுடைய வம்சமே பூண்டற்றுப் போய்விடுவதன்றி, சகல செல்வமும் பராதீனமாகி விடுமே என்ற பெருத்த கவலையும் உண்டாகிவிட்டது. அதோடு, தான் அம்பட்டச்சியின் மகனை வைத்துப் பிள்ளை என்று வளர்த்து அவ்வளவு காலம் உலகத் தையே ஏமாற்றி வந்த விஷயம் வெளியாகி விடுமானால், அதன் பிறகு தனது மானமே போய்விடும் ஆதலால் தான் எந்த மனிதரின் முகத்திலும் விழிக்க முடியாமல் போய்விடுமே என்ற பெரும் பீதியும் உண்டாகிவிட்டது. ஆகையால், தனது சமஸ்தானத்தையே அடமானம் வைத்தாகிலும், மைனரது உயிரையும், தனது மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட கல்யாணியம்மாள் பாரிஸ்டர்களுக்கு லட்சக் கணக்கில் பணத்தை வாரி இறைத்ததன்றி, போலீசாருக்கும், நியாயாதிபதி களுக்கும் ஏராளமான தொகைகளைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தாள். ஆனால் அந்த இடங்களில் அவர்களது பிரயத்தனம்