196 மதன கல்யாணி
நேர்ந்தாலும், உன்னுடைய யோக்கியதைக்குத் தகுந்த இன்னொரு பெரிய இடத்துக்கே நீ வந்து சேர்ந்தது ஈசுவர கிருபையினால் என்றே நினைக்கிறேன். மாணிக்கக்கட்டி எங்கே போனாலும, அதற்குப் பூஜிதையே ஏற்படுமல்லவா? அதுபோலவே, உனக்கும் ஏற்பட்டது. குழந்தாய்! இவ்வளவு காலம் வரையில் இராமர் வனவாசம் செய்தது போல உன்னுடைய கிரகச்சாரத்தினால், நீ உன் தாயையும், தங்கைமார்களையும், சகலமான சம்பந்துகளை யும் விட்டிருக்க நேர்ந்தாலும், இப்போதாவது, உன்னுடைய பிறப்புரிமைகளை நீ திரும்ப அடைவதற்கு ஈசுவரன் கிருபை செய்ததைப் பற்றி நான் அடையும் ஆனந்தத்தை என்ன வெனறு வெளியிடுவேன்! ஆகா! என்னுடைய தேகம் பூரித்துப் புளகாங்கிதமடைகிறது! கண்ணே நீ சகலமான செல்வத்துடனும் வைபோகமாக நீடுழிகாலம் வாழ வேண்டும் என்று நான் ஜெகதீச னைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறி ஆனந்தசாகரத்தில் ஆழ்ந்து நெக்குநெக் குருகி அவனை மனமார்ந்த ஆசையோடு இன்னொரு முறை கட்டித் தழுவ, அந்தச் சமயத்தில் மதனகோபாலன அது பொய்யோ மெய்யோ கனவோ நினைவோ என்ற சந்தேகத்தினால வதைபட்ட மனத்தினனாய், ஆனந்த மேலீட்டால் வாய் திறந்து பேசவும் மாட்டாமல் தத்தளித்து சுவர்க்க போகம் அனுபவிப் பவன் போல, இன்பசுகத்தில் அழுந்தி மிதந்தவனாய் அவரை நோக்கி, "தங்களைப் போனற பெரியவர்களுடைய ஆசீர்வாதமும் கிருபையும் என்மேல் பரிபூரணமாக இருக்க, எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது! இது வரையில் நான் மனிதனானதும், இப்போது நான் இந்தப் புதிய செல்வத்தையும் பதவியையும் அடைவதும் எல்லாம் நாங்கள் கொடுத்த பிச்சையே யொழிய வேறல்ல" என்று மிகவும் உருக்கமாகவும் மனப்பூர்வமான பய பக்தியோடும் கூறினான். அப்போது கச்சேரியிலிருந்த ஜனக் கும்பல் முழுதும், கல்லும் கரைந்துருகத் தக்கதாக இருந்த அந்தக் காட்சியைக் கண்டு, ஆனந்த பாஷ்பம் சொரிந்தவர்களாய் சமீபத்தில் வந்து மதனகோபாலனது அழகை நோக்கும் பொருட்டு ஒருவர் மீதொருவர் வீழ்ந்து மோதியடித்துக் கொண்டு முந்தினார் கள். அந்தச் சமயத்தில், "விலகுங்கள்; விலகுங்கள்" என்று கூறிய வண்ணம் வழிசெய்து கொண்டு வக்கீல் சிவஞான முதலியார்
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/199
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
