பக்கம்:மதன கல்யாணி-3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 195 இவருக்கு அவள் மீது பெருத்த ஆக்கிரோஷமும் பகைமையும் கடுங்கோபமும் உண்டாவது மனித இயற்கைதான். அதோடு இந்தக் குற்றத்தைச் செய்ததாக இவரே ஒப்புக் கொண்டிருப்பதை யும், இவர் அறியாத சிறிய பிள்ளை என்பதையும் கருதி, இவருடைய விஷயத்தில் காருண்யம் பாராட்டி இவரை நாம் தீவாந்தர சிகூைடிக்கு ஆளாக்கி இருக்கிறோம். கிழவியைக் கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக பாலாம்பாளுக்கு இரண்டு வருஷக் கடினகாவல் சிகூைடி விதித்திருக்கிறோம் - என்று எழுதப் பட்டிருந்த தீர்மானம் படிக்கப்பட்டது. உடனே ஜெவான்கள் குற்றவாளிகளை அழைத்துக் கொண்டு போக முயல, போலி மைனர் பெருத்த கூச்சலிட்டு முரண்டி ஜட்ஜியை நோக்கி, "ஐயா! எனக்கு தீவாந்தர சிகூைடி வேண்டாம். எனக்கு மரண தண்டனையே கொடுத்து விடுங்கள்; நான் இனி மேல் உயிரோடிருக்க மாட்டேன. எப்படியும் நீங்கள் என்னைக் கொன்றே தீரவேண்டும்; கிழவியைக் கொன்றதாக நானே ஒப்புக் கொள்ளுகிறேன். அப்படி இருக்க, என்னைக் கொன்றுவிட வேண்டுமேயன்றி எனக்குக் கருணை காட்ட உங்களுக்கு அதிகாரம் ஏது?" என்று கூறிக் கூச்சலிட்டான். பாலாம்பாள், "ஐயா தொரைகளே! நான் இந்தக் குற்றத்தையே செய்யவில்லை. இந்த மைனர் தான் அடித்துக் கொன்றான். நான் பக்கத்திலிருந்து பார்த்துக் கொணடிருந்தேன். என்னை அநியாயமாகத் தண்டிக்கிறீர் களே; நான் ஜெயிலுக்கு வரமாட்டேன்" என்று கூக்குரலிட்டுப் பிரலாபிக்கத் தொடங்கினாள். ஜட்ஜி துரை ஜெவான்களைப் பார்த்து அவர்களைக் கொண்டு போகும்படி சைகை செய்ய அவர்கள் கைதிகள் இருவரையும் தொட்டு பலவந்தமாக இழுத்துக் கொண்டு போயினர். ஜடஜியும் உடனே தமது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார். அதே சமயத்தில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஒடோடியும் வந்து, மதனகோபாலனைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்து, "அப்பா குழந்தாய! சத்தியம் எப்படியும் வெல்லும் என்பது நிஜமாகிவிட்டது! பங்காளியின் சதிமோசத்தினால் நீ உனக்குச் சொந்தமான உன்னத பதவியிலிருந்து விலகியிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/198&oldid=853336" இலிருந்து மீள்விக்கப்பட்டது