210 மதன கல்யாணி
நினைப்பதுண்டா என்னவோ நல்ல வேளைதான் நீயும் தப்பிப் பிழைத்தாய்; உன்னுடைய தாயாரும் தப்பிப் பிழைத்தார்கள்" என்று அன்பாகக் கூறினார். மதனகோபாலன், "ஆ! எனனுடைய அம்மாள் உயிரோடிருக்கிறார்களா! எங்கே இருக்கிறார்கள்? என்னை அழைத்துக் கொண்டு போய் அவர்களை நான் பார்க்கும் படி செய்யக்கூடாதா? என்னுடைய மனம் தவிககிற தவிப்பைக் கண்டு தங்களுக்கு மனம் இரங்கவில்லையா?" என்று மிகவும் உருக்கமாகவும் விசனமாகவும் கூறினான். அப்போது அவனது கண்களிலிருந்து கண்ணிர் பெருகி வழிந்து தாரை தாரையாக ஒடத் தொடங்கியது. அதைக் கண்ட மோகனாங்கி பதறிப் போய் அவனுக்கருகில் நெருங்கி வந்து, "அண்ணா! அழவேணடாம்; அழ வேண்டாம்" என்று கூறித் தனது சேலைத் தலைப்பால் வாத்சல்யத் தோடு அவனது கண்ணிரைத் துடைத்து விட்டாள. அப்போது கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் அவனைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியும் அன்பும் புன்னகையும் ஜ்வலித்த முகத்தோடு, "அப்பா குழந்தாய்! உன்னுடைய தாயைப் பார்க்க வேண்டும் என்று உன் மனம் எவ்வளவு பாடுபடுகிற தென்பது, நீ வீட்டின் உச்சியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததிலிருநதே நன்றாகத் தெரிந்து போய்விட்டது. இப்போது ராத்திரி பத்துமணி சமயமிருக்கும். நாம் இப்போது மனோகர விலாசத்தில் இருக்கி றோம். உன்னுடைய அம்மாள் தேனாம்பேட்டையில் இருக்கிறார் கள். நீ ஆண்பிள்ளை ஆகையால் சீக்கிரமாகத் தெளிவடைந்து விட்டாய்; அவர்கள் பெண்பிள்ளை; அவர்கள் இன்னமும அசெளக்கியமாகவே படுத்துக் கொண்டிருப்பாாகள் என்று நினைக்கிறேன். அப்படிப்படட நிலைமையில், நீ இப்போது அவர்களிடம் போனால், அவர்களுடைய மனதில் ஏற்படும் பெருத்த களிப்பையும் ஆனந்தத்தையும் தாங்கமாட்டாமல் அவா களுடைய பிராணன் போனாலும் போய்விடும். உன்னுடைய தாயை நீயே கொன்றவனாகி விடுவாய். ஆகையால, எப்படியா வது நீ நாளைய காலை வரையில் பொறுத்துக் கொள். அதற்குள் அவர்களுடைய உடம்பும் திடப்பட்டுப் போகும்; அதிகாலையில் நீ போய் அவர்களைப் பார்க்கும்படி செய்கிறேன்" என்றாா.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/213
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
