பக்கம்:மதன கல்யாணி-3.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223 களிருகக, அப்போது தனது தாயின் மார்போடு ஒன்றியிருந்த மதன கோபாலன் தனது தாயை நோக்கி, "அம்மா! நான் ஜென்மம் எடுத்த தற்கு இன்றைய தினநதான சுபதினம். இத்தனை வருஷ காலம் தங்களை விட்டுப் பிரிந்து, தங்கள் முன்பாகவே கேவலத் தொழில் செய்து வந்த எனனைத் தங்கள் பிள்ளை என்று ஏற்றுக் கொள்வீர் களோ மாட்டீர்களோ எனறு நேற்று முழுதும் என் மனம்பட்ட பாடு சுவாமிக்குத் தான் தெரிய வேண்டும். நல்ல வேளையாக ஒப்புக் கொண்டீர்களே, இது ஒன்றே போதும். எனக்கு வேறே எந்தச் செல்வமும் ஒரு பொருட்டானதல்ல" என்றான். அதைக் கேட்ட கல்யாணியம்மாள, "அப்பா கண்ணே! என்னுடைய வயிற்றில் ஜனித்த, விலையில்லா மாணிக்கமான உனக்குச் சமமான குழந்தை இந்த ாரேழு பதிநாலு லோகத்திலும் கிடைப்பானா! எவர்க்கும் கிட்டாத இப்படிப்பட்ட பாக்கியத்தை நான் வேண்டாம் என்று சொல்வேனா! முப்பத்து முக்கோடி தேவாகளும், மும்மூர்த்திகளும், மற்றவரும் சேர்ந்து அரும்பாடு பட்டுக் கடைந்தெடுதத தேவாமிர்தத்தை, அது கேவலம் சமுத் திரத்தில் கிடந்ததென்று யாராவது ஏளனம் செய்து விலக்குவார் களா? என் ராஜாவே! என் குலத்தை விளக்க வந்த செல்வக் கொழுந்தே! உனக்குச் சமமானவன் நீயேயன்றி, இந்த உலகத்தில் வேறே எவனும் இருக்க மாட்டான என்பது முக்காலும் சத்தியம். அபபடிப்படட நிகரற்ற சிங்கக்குட்டி இருநது ஆண்டனுபவிக்க வேண்டிய இந்த ராஜாங்கத்தில் கேவலம் ஒரு நாய்க்குட்டியை இதுவரையில் உட்கார வைத்தோமே என்று என் மனம் எவ்வளவு தூரம் கொதிக்கிறது தெரியுமா? அந்த விஷயத்தில் நீ எங்கள் மேல் ஒருவேளை அருவருபபடைந்து எங்களைப் புறக்கணித்து விடுவாயோ என்று என மனம் படும்பாடு சுவாமிககுததான் தெரிய வேணடும்" எனறு உருக்கமாகக் கூறினாள். அதைக் கேட்ட மதனகோபாலன, "அம்மா! என்னுடைய ஸ்தானத்திலிருந்த அம்பட்டச்சியின் பிள்ளையை நான் ஒருநாளும் வெறுத்துத் தூவிக்க மாட்டேன். அவன நமக்குப் பெருத்த உபகாரம் செய்திருக்கிறான். எனனைத் திருடன் அபகரித்துக் கொண்டு போன பிறகு அவன் மாத்திரம் இல்லாமல் இருந்தால், இந்நேரம் இந்த சமஸ்தானம் எல்லாம் பராதீனமாகிப் பங்காளியின் ம.க.lti-15