பக்கம்:மதன கல்யாணி-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மதன கல்யாணி வார்த்தைகள் திக்கிப் போயின; அவளது தேகம் ஆனந்த நிருத்தனம் செய்கின்றது; அநதப் பதினாறு வருஷ காலத்திலும் அந்தச் சீமாட்டி தனது புத்திரனால் எவ்வளவு களிப்பும் இன்பமும் எய்திருப்பாளோ அவ்வளவும் ஒன்றுகூடித் திரண்டு வட்டியும் முதலுமாக ஆயிரம் மடங்கு பெருகி அவனோடுகூட வந்ததோ என ஐயுறும்படி, கல்யாணியம்மாள் மெய்ம்மறந்து, அன்னியர் இருப்பதையும் உணராமல் மதன கோபாலனை ஒரு கைக குழந்தை போல எடுத்தெடுத்து மார்போடு அணைத்து உருகிப் பாகாயோடித் தனது கண்களிலிருந்து சப்த மேகங்களும வருவழிப்பது போல ஆனந்த பாஷ்பத்தை ஆறாகப் பெய்து அவனை நீராட்டுகிறாள்; தனது மனதிலிருந்து பொங்கிப் பொங்கி எழும் இன்பப் பெருக்கைத் தாங்கமாட்டாமல் பொங்கிப் பொருமி விம்மிவிம்மி அழுகிறாள். அது போலவே மதனகோபாலனும ஆனந்தக் கடலில் ஆழ்ந்து மிதந்து மெய்ம்மறந்து சுவர்க்க போகம் அநுபவிப்பவன் போலப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து வாய்பேசா ஊமையனாய் ஆனந்தக் கண்ணிரை ஆறாகப் பெருக விட்டுத் தாயோடு தாயாக ஐக்கியமாகி நின்றான். அவன், "அம்மா அம்மா" என்று அழைத்துக் கொண்டு ஓடிவந்த ஒசையைக் கேடடு அந்த பங்களாவிலிருந்த எல்லா ஜனங்களும் அந்த ஆனநதக் காட்சியைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டு ஓடோடியும் வந்து கல்யாணியம்மாளது அந்தப்புரத்தில் கும்பலாகக்கூடி நெருங்கினர். பக்கத்திலிருந்த புஸ்தக மகாலில் நித்திராதேவியை அணைந்து படுத்திருந்த சிவஞான முதலியாரும் திடுக்கிட்டு விழித் தெழுந்து உள்ளே ஓடிவந்து நிற்கிறார். பதினாறு வருஷகாலம் பிள்ளையும் தாயும் பிரிந்திருந்து கூடிய, கல்லுங் கரைந்துருகும் படியான அந்த அரிய காட்சியை அங்கிருந்தோர் யாவரும் கண்டு களித்து நெக்கு நெக்குருகி விம்மிவிம்மி அழுது ஆனந்த பாஷ்பம் சொரிந்து பொங்கிப் பொருமி, "ஐயோ! என்னப்பா இப்படிப்பட்ட ராஜாங்கத்தில் பிறந்த உனக்கு என்ன விதி வந்ததபபா!" என்று வாய் விடடுப் புலம்பிப் பிரலாபிக்கின்றனர். அவர்கள் பேசிய ஒவ் வொரு வார்த்தையையும் கேட்கும் போதெல்லாம் அவர்களுக்கு மயிர் சிலிர்த்து ஆனந்தம் பரவுகிறது; இன்பப் பெருக்கினால் நெஞ்சடைத்துப் போகிறது. அப்படிப்பட்ட நிலைமையில் ஜனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/225&oldid=853366" இலிருந்து மீள்விக்கப்பட்டது