பக்கம்:மதன கல்யாணி-3.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253 கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரும் கல்யாணியம்மாளும் ஆனந்த பரவசமடைந்து பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தனர். அந்தச் சமயத்தில் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது திருஷ்டி, சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தமது தங்கையான மீனாகூஜியம்மாள் மீது சென்றது. அப்போது கண்மணியம்மாள் பக்கத்திலிருந்த விடுதிக் கதவின் மறைவில் நாணித் தலைகுனிந்து நின்ற வண்ணம், அங்கே நடந்த சம்பவங்களை எல்லாம் ஆதியோடந்தமாகக் கவனித்தவளாய், அடிக்கடி கடைக்கண்ணால் மதனகோபாலனை பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்து பூரித்திருந்தாள். அப்போது கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தமது தங்கையை நோக்கி மிகவும் அன்பாகப் பேசத் தொடங்கி, "என்ன மீனாகூஜி! ஏன் துரைராஜா வரவில்லை? அவனையும் அழைத்துக் கொண்டு வரும்படி நான் ஆளிடம் சொல்லி அனுப்பினேன்!" என்றார். அதைக் கேட்ட மீனாகூஜியம்மாள், "அண்ணா! அவனை இரண்டு நாள்களாகக் காணோம். நேற்றைக்கு முந்திய நாள் தினம் ஹைகோர்ட்டில் நடந்த விசாரணையின் விவரங்களைத் தெரிந்து கொள்ளப் போனவன் அதன் பிறகு வீட்டுக்கே திரும்பி வரவில்லை. அவன் எங்கே போனான் என்பதே தெரியவில்லை. ஆள்களை விட்டுத் தேடக்கூடிய இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டோம். என்னவோ, ஏதோ என்று எனக்கு நிரம்பவும் கவலையாக இருக்கிறது" என்றாள். உடனே கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், "சரி; எங்கேயாவது தேவடி யாள் வீட்டிலிருப்பான். கையிலிருக்கும் பணம் தீர்ந்து போய், மறுபடியும் பணம் தேவையானால் தானே வருகிறான். அவன் என்ன குழந்தையா! எங்கேயாவது காணாமற் போய்விடுவானோ என்கிற பயமே இல்லை" என்றார். அதைக் கேட்ட மீனாகூஜியம் மாள் முதலிய எல்லோரது தேகமும் குன்றியது. எல்லோரும் கிலேசமுற்றுக் கீழே குனிந்தனர். உடனே ஜெமீந்தார் மேலும் பேசத்தொடங்கி, "ஒருகால் இப்படி இருக்கலாம். தன்னுடைய ஆருயிர்த் தோழனாகிய அம்பட்டப் பையன் அந்தமான் தீவுக்குப் போகிறானே என்று விசனப்பட்டு